நியுரெக் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியுரெக் அணை
நியுரெக் அணை
நியுரெக் அணை
உருவாக்கும் ஆறு வக்ஷ் ஆறு
உருவாக்குவது நியுரெக் நீர்த்தேக்கம்
அமைவிடம் நியுரெக் , காட்லான் & சுஜட் மாவட்ட எல்லை, தஜிகிஸ்தான்
நீளம் 700 m (2,300 ft)
உயரம் 304 m (997 ft)
கட்டத் தொடங்கியது 1961
திறப்பு நாள் 1980
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 10.5 km3 (8,500,000 acre·ft)
மேற்பரப்பு 98 km2 (38 sq mi)

நியுரெக் அணை (Nurek Dam) மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள நிலப்பகுதியை கரையாக கொண்ட ஒரு அணைக்கட்டு ஆகும். இது தஜிகிஸ்தானின் வக்ஷ் நதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஜிகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்தபோது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 300 (984 அடி) மீட்டர் உள்ள இந்த அணையே உலகின் மிக உயரமான அணையாகும்.[1] இது நாட்டின் தலைநகரான துசான்பேவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. நீர்மின்சாரம் எடுப்பதற்காக இதில் 305 மெகாவாட் ஆற்றலுடைய ஒன்பது சுழலிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டு அவற்றின் திறன் 335 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.

இந்த அணை உருவாக்கிய நீர்தேக்கத்திற்கு நியுரெக்(நுரெக்) என்று பெயர். இதுவே தஜிகிசுத்தானின் பெரிய நீர்ந்தேக்கமாகும் இதன் கொள்ளளவு 10.5 கன கி.மீ. இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 70கிமீ, இதன் பரப்பளவு 98 சதுர கிமீ.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நியுரெக்_அணை&oldid=1727260" இருந்து மீள்விக்கப்பட்டது