நிகழ்ச்சி (நிகழ்தகவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிகழ்தகவுக் கோட்பாட்டில் ஒரு சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளியிலுள்ள ஒவ்வொரு உட்கணமும் நிகழ்ச்சி (Event) எனப்படும். கூறுவெளியின் அடுக்குக் கணத்தின்(power set) ஒவ்வொரு உறுப்பும் ஒரு நிகழ்ச்சியாகும். கூறுவெளி முடிவுறுகணமாக இருந்தால் மட்டுமே நிகழ்ச்சியை இவ்வாறு வரையறுக்கலாம்.

நடக்ககூடிய அனைத்து நிகழ்வுகளின் கணமான கூறுவெளி, ”உறுதியாக” அல்லது”நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சி (Sure event) எனப்படுகிறது.இதன் நிகழ்தகவு ஒன்று. வெற்றுகணம் ”இயலா நிகழ்ச்சி” (Impossible event) என்று அழைக்கப்படுகிறது. இதன் நிகழ்தகவு 0. (கணங்களில், ஒவ்வொரு கணத்திற்கும் அந்தக்கணமே ஒரு உட்கணமாகவும் வெற்றுக்கணமும் ஒரு உட்கணமாகவும் அமையும்)

பொருளடக்கம்

[தொகு] எடுத்துக்காட்டுகள்

ஒரு நிழ்ச்சியென்பது கூறுவெளியின் உட்கணமாக அமையும் என்பதால் அது ஓருறுப்புக்கணமாகவோ, வெற்றுக்கணம் அல்லது அனைத்து உறுப்புகளையும் கொண்ட கணமாகவோ அல்லது பல உறுப்புகளைக் கொண்ட தக்க உட்கணமாகவோ இருக்கலாம்.

ஒரு பகடையை வீசும்போது கூறுவெளி - \{ \text{1,2,3,4,5,6}\}. இதில்

  • ஆறுக்கு மேற்பட்ட எண் கிடைக்ககூடிய நிகழ்ச்சி \{ \text{ }\}
  • எண் 4 கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி\{ \text{4}\}
  • 3க்கு கீழ் உள்ள எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி\{ \text{1,2}\}
  • ஒற்றை எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி \{ \text{1,3,5}\}
  • 2க்கு மேற்பட்ட எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி\{ \text{3,4,5,6}\}
  • 1க்கு மேற்பட்ட எண்கள் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி\{ \text{2,3,4,5,6}\}
  • ஏதேனும் ஒரு எண் கிடைக்கக்கூடிய நிகழ்ச்சி\{ \text{1,2,3,4,5,6}\}

[தொகு] வகைகள்

1)சாதாரண நிகழ்ச்சி அல்லது அடிப்படை நிகழ்ச்சி (simple event) என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையில் கிடைக்கக்கூடிய நிகழ்வுகளில் (முடிவுகள்) அதற்குமேலும் சிறு சிறு நிகழ்வுகளாகப் பிரிக்க இயலாதவை

ஒரு பகடையை வீசும் சோதனையில் \{ \text{1}\}, \{ \text{2}\}, \{ \text{3}\}, \{ \text{4}\}, \{ \text{5}\}. \{ \text{6}\} அடிப்படை நிகழ்ச்சிகள்

2)ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்(mutually exclusive events) என்பவை ஒரு சமவாய்ப்புச் சோதனையில் தமக்குள் பொதுவான அடிப்படை நிகழ்ச்சிகள் இல்லாத இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள்.

அதாவது ஒரு சோதனையில் ஒருநிகழ்ச்சி நிகழ்ந்தால் மற்றொரு நிகழ்ச்சி நிகழமுடியாது எனில் அவை இரண்டும் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்.

ஒருபகடையை வீசும் சோதனையில் இரட்டையெண்கள் விழக்கூடிய நிகழ்ச்சியான \{ \text{2,4,6}\} ம், ஒற்றையெண்கள் விழக்கூடிய நிகழ்ச்சியான \{ \text{1,3,5}\} ம் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள். ஒன்று நிகழும்போது மற்றொன்று நிகழாது.

[தொகு] நிகழ்தகவு

கூறுவெளி S ல் உள்ள விளைவுகள் அனைத்தும் சமவாய்ப்புள்ளதாக இருந்தால் நிகழ்ச்சி A ன் நிகழ்தகவு காணும் வாய்ப்பாடு

\mathrm{P}(A) = \frac{n(A)}{n(S)}\,

n(A) என்பது நிகழ்ச்சி A ன் கணத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையையும் n(S) என்பது கூறுவெளி Sல் உள்ள உறுப்புகளையும் குறிக்கிறது. மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகளை இந்த வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்.

[தொகு] வென்படம்

நிகழ்ச்சியின் வென் படம் B என்பது கூறுவெளி, A என்பது நிகழ்ச்சி.
அவற்றின் பரப்பளவு விகிதப்படி Aன் நிகழ்தகவு தோராயமாக 0.4.

நிகழ்ச்சிகள் அனைத்தும் கணங்களாக வரையறுக்கப்படுவதால் நிகழ்ச்சிகளை வென்படங்கள் மூலமாகவும் விளக்கலாம். வலப்புறம் இணைக்கப்படுள்ள படத்தில்:

B என்பது கூறுவெளி,

A என்பது நிகழ்ச்சி.

அவற்றின் பரப்பளவு விகிதப்படி Aன் நிகழ்தகவு தோராயமாக 0.4.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்ச்சி_(நிகழ்தகவு)&oldid=764498" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்