நாவரசு கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாவரசுக் கொலை வழக்கு இந்தியாவின் மாநிலமாக தமிழகத்தின், சிதம்பரம் மாவட்டத்திலுள்ள அண்ணாமலைப்பல்கலைக்கழக மருத்துவ கல்வி முதலமாண்டு மாணவரான பொன்.நாவரசு 1996 ஆம் ஆண்டு நவம்பர் 6[1] அன்று அதே கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு முதுநிலை மாணவரான ஜான்டேவிட் இன் பகடிவதைக்கு (கேலிவதை, ragging) இணங்க மறுத்ததால் கொலை செய்யபட்டார். அவர் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டியெடுத்து ஆற்றில் வீசியெறிந்தார் ஜான் டேவிட். இக்கொலைச்சம்பவத்திற்காக ஜான் டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் 1998, மார்ச் 11 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. பின் மேல்முறையிட்டீன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அக்டோபர் 8, 2001[2] அன்று விடுதலை செயல்பட்டார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு[3] செய்யபட்டது. ஏப்ரல் 2011ல் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்காமல், ஒரே நேரத்தில் அனுபவிக்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து காவல் துறையிடம் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது சிறையில் உள்ளார்.[4][5]

கொலை செய்யபட்ட மாணவர் நாவரசுவின் தந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் ப.க.பொன்னுசாமி [6]என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் ஒரே மகனை இழந்த நாவரசுவின் பெற்றோர் வருங்காலத் தலைமுறையினரை நல்லவர்களாய்ச் செதுக்கும் பொருட்டு பொன் நாவரசு அறக்கட்டளை என்ற அமைப்பை 1997 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் துவக்கினர்.

இக்கொலையினால் தூண்டப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை (Tamil Nadu Prohibition of Ragging Act) 1997ல் இயற்றியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. தட்ஸ் தமிழ்பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-06-2009
  2. இந்து வலைத்தளம்-09-10-2001பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-06-2009
  3. தட்ஸ் தமிழ்பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-05-2009
  4. SC upholds two life terms for Navarasu killer
  5. John David surrenders, at last
  6. இந்தியன் எக்ஸ்பிரஸ் 12-03-1998 நாளிதழ்பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-06-2009
  7. 19 tech students in custody for ragging

வெளியிணைப்புகள்[தொகு]

பொன் நாவரசு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாவரசு_கொலை_வழக்கு&oldid=1377791" இருந்து மீள்விக்கப்பட்டது