நாற்றுமேடை
நாற்றுமேடை என்பது தாவரங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, நாற்று அல்லது இளம் தாவரமாக இருக்கையில், அவை தகுந்த வளர்ச்சியடைந்து வருவதற்காக உகந்த சூழ்நிலைகளை வழங்கி பராமரிக்கும் இடமாகும். இப்படியான நாற்றுமேடைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்கள் சிறிய அளவில் பொது மக்களுக்கு சில்லறையாக விற்கப்படும் நோக்கிலோ, அல்லது பெரிய அளவில் வேறு நாற்றுமேடைகளுக்கோ அல்லது வர்த்தக ரீதியான தோட்டங்களை வைத்திருப்பவர்களுக்கோ விற்கப்படக்கூடிய மொத்த விற்பனை நோக்கிலோ வளர்க்கப்படலாம். சில தனியார் நிறுவனங்களில், அல்லது தனியார் தோட்டங்களில் தமது நாற்றுத் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் இவ்வாறான நாற்றுமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சில நாற்றுமேடைகள் பல்வேறுபட்ட தாவரங்களை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தும் நோக்கிலும், வேறு சில பல தாவரங்களை வளர்த்தெடுக்கவும், இன்னும் சில நாற்றுமேடைகள் குறிப்பிட்ட ஒரு தாவரத்திற்காகவோ தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
[தொகு] நாற்றுமேடை தயாரிப்பு முறை
பொதுவாக நாற்றுமேடைகள் கண்ணாடி அல்லது நெகிழிகளால் ஆன குகைபோன்ற அமைப்பையுடைய பசுமைக்குடில்களில் தயார் செய்யப்படுகின்றன.