நான்காம் ஈழப்போர்
| நான்காம் ஈழப்போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| ஈழப் போர் பகுதி | |||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள் | |||||||
| மகிந்த ராஜபக்ச | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||||
| பலம் | |||||||
| 150,000 (ஏறத்தாழ.) | 18,000 (ஏறத்தாழ.) | ||||||
நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைபற்றியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17 அல்லது 18, 2010 அன்று கொல்லப்பட்டார். மே 18ல் இலங்கை அரசு புலிகளுக்கெதிரான போர் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்தது.
பொருளடக்கம் |
புலிகளின் வீழ்ச்சி [தொகு]
கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வடக்குப் பகுதி நோக்கிய தாக்குதலை இலங்கை அரசு ஆரம்பித்தது. 2009 சனவரியில் புலிகளின் அரசியல் தலை நகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்தது[1]. இதன் தொடர்ச்சியாக 2009 மே 18ம் திகதி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றுமாகத் தோற்கடித்து விட்டதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து புலிகளின் அடுத்த தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டார் பத்மநாதன். ஆயினும் விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளே இது சம்பந்தமாக குழப்பங்கள் நிலவியது. ஆயினும் ஆகஸ்ட் 2009 இல் தன்னைத் தானே தலைவராக நிறுவிய பத்மநாதனை இலங்கை அரசு மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் வைத்துக் கைது செய்தது[2].
படுகொலைகள் [தொகு]
- சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை
- ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே
- கேதீஸ் லோகநாதன்
- லக்சுமன் கதிர்காமர்
- ஜானக பெரேரா
- வேலுப்பிள்ளை பிரபாகரன் [3][4]
- சார்ல்ஸ் அந்தனி