நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் படைப்புகள் மக்கள் அனைவரையும் சென்று அடைதல் வேண்டும் என்னும் சீரிய நோக்கத்துடன் அவர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு ,அவர்தம் மரபுரிமையருக்கு தமிழக அரசு பரிவுத்தொகை வழங்குவதைக் குறிக்கும். அச்சான்றோர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் பரிவுத்தொகை வழங்குவர். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை எழுதிய தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கிறது.

இதன் படி 2009-2010-ம் ஆண்டு 28 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களது மரபுரிமையாளர்களுக்கு 84 இலட்சம் இந்திய ரூபாய் பரிவுத்தொகை வழங்க உத்தரவு வழங்கினர். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், இராய சொக்கலிங்கனார், ச. அகத்தியலிங்கம், பாவலர் நாரா. நாச்சியப்பன், புலியூர்க்கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு. ராகவையங்கார் ஆகிய ஒன்பது தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கினர். அவர்களின் மரபுரிமையருக்கு முறையே ஐந்து இலட்சம் இந்திய ரூபாய் பரிவுத்தொகை வழங்கினர்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பம்மல் சம்பந்தனார், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், மு. சி. பூர்ணலிங்கம்பிள்ளை, தொ. மு. பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை. மு. கோதை நாயகி, பூவை எஸ். ஆறுமுகம், என். வி. கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த. கோவேந்தர், திருக்குறள்மணி அ. க. நவநீதகிருட்டிணன் ஆகிய தமிழ்ச்சான்றோர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு முறையே இந்திய ரூபாய் மூன்று இலட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கினர்.

2010-2011 -இல் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் உள்ளிட்ட 23 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கினர்.

மேலும், சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று, தனி நேர்வாக கருதி அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத, காரணத்தால் அவருக்கு மூன்று இலட்சம் இந்திய ரூபாய் பரிவுத் தொகை வழங்கினர்.

[தொகு] நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்

ஆண்டுகள் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளன.

  1. பாரதியார் (1963)[1]
  2. ம.பொ.சி: (அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984, (ஆ) பிற :: அனைத்து நூல்களுக்கும் 2006
  3. பாரதிதாசன் 1988
  4. அண்ணாத்துரை 1995
  5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995
  6. தேவநேயப் பாவாணர் 1996
  7. மறைமலையடிகள் 1997
  8. திரு. வி. கலியாணசுந்தரனார். 1998
  9. கல்கி 1998
  10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998
  11. ப. ஜீவானந்தம் 1998
  12. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998
  13. வ.உ. சிதம்பரனார் 1998
  14. ஏ.எசு.கே. அய்யங்கார் 1998
  15. வ.ராமசாமி 1998
  16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998
  17. கா. மு. ஷெரீப் 1998
  18. பரலி சு. நெல்லைப்பர் 1998
  19. வ. வே. சுப்பிரமணியம் 1998
  20. காரைக்குடி சா. கணேசன் 1998
  21. ச. து. சு. யோகி 1998
  22. வெ. சாமிநாத சர்மா 2000
  23. கவிஞர் முடியரசன் 2000
  24. தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000
  25. சாமி சிதம்பரனார் 2000
  26. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை 2001
  27. புதுமைப்பித்தன் 2002
  28. கு.ப.சேது அம்மாள் 2002
  29. நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் 2004
  30. க. நா. சுப்ரமண்யம் 2004
  31. ந. பிச்சமூர்த்தி 2004
  32. புலவர் குழந்தை 2006
  33. பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) 2006
  34. திரு. கா.சு. பிள்ளை 2006-2007
  35. புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007
  36. தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 2006-2007
  37. முனைவர் சி. இலக்குவனார் 2006-2007
  38. மகாவித்வான் எம். எம். தண்டபாணி தேசிகர் 2006-2007
  39. தி.ச.அரங்கநாதன் (தி.ச.ர) 2006-2007
  40. நாரண துரைக்கண்ணன் 2006-2007
  41. முனைவர் மா. இராசமாணிக்கனார் 2006-2007
  42. முனைவர் வ. சுப. மாணிக்கம் 2006-2007
  43. புலவர் கா. கோவிந்தன் 2006-2007
  44. சக்தி வை. கோவிந்தன் 2006-2007
  45. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007
  46. த.நா. குமாரசாமி 2006-2007
  47. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007
  48. ம. சிங்காரவேலர் 2007 - 08
  49. குன்றக்குடி அடிகளார் 2007 - 08
  50. கி. ஆ. பெ. விசுவநாதம் 2007 - 08
  51. கி. வா. ஜகந்நாதன் 2007 - 08
  52. ஔவை துரைசாமி 2007 - 08
  53. அ. ச. ஞானசம்பந்தன் 2007 - 08
  54. திருக்குறள் முனுசாமி 2007 - 08
  55. உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08
  56. சாவி 2007 - 08
  57. மாவெண்கோ என்ற வ. கோ. சண்முகம் 2007 - 08
  58. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08
  59. எசு.எசு. தென்னரசு 2007 - 08
  60. சி.பி. சிற்றரசு 2007 - 08
  61. ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08
  62. டி.கே. சீனிவாசன் 2007 - 08
  63. இராம. அரங்கண்ணல் 2007 - 0
  64. கவிஞர் வாணிதாசன் 2007 - 08
  65. கவிஞர் கருணானந்தம் 2007 - 08
  66. மருதகாசி 2007 - 08
  67. சலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08
  68. கவிஞர் ம. ப. பெரியசாமித்தூரன் 2008 - 09
  69. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09
  70. பண்டித க.அயோத்திதாசர் 2008 - 09
  71. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09
  72. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09
  73. முனைவர் ரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09
  74. மகாவித்வான் இரா. இராகவையங்கார் 2008 - 09
  75. உடுமலை நாராயண கவி 2008 - 09
  76. கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09
  77. ஔவை தி.க. சண்முகம் 2008 - 09
  78. விந்தன் 2008 - 09
  79. இலா.ச. இராமாமிர்தம் 2008 - 09
  80. வல்லிக்கண்ணன் 2008 - 09
  81. நா.வானமாமலை 2008 - 09
  82. கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09
  83. அ. இராகவன் 2008 - 09
  84. தொ. மு. சிதம்பர ரகுநாதன் 2008 - 09
  85. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09
  86. முனைவர் ந. சஞ்சீவி 2008 - 09
  87. முல்லை முத்தையா 2008 - 09
  88. கவிஞர் எசு. டி. சுந்தரம் 2008 - 09
  89. கவிஞர் மீரா 2008 - 09
  90. பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார் 2008 - 09
  91. புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09
  92. சு. சமுத்திரம் 2008 - 09
  93. கோவை இளஞ்சேரன் 2008 - 09
  94. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09
  95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008
  96. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10
  97. பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10
  98. பம்மல் சம்பந்தனார் 2009 - 10
  99. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10
  100. மு. சி. பூரணலிங்கம் பிள்ளை 2009 - 10
  101. தொ.மு. பாசுகரத் தொண்டைமான் 2009 - 10
  102. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10
  103. முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10
  104. பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10
  105. புலியூர்க் கேசிகன் 2009 - 10
  106. வை. மு. கோதைநாயகி 2009 - 10
  107. சின்ன அண்ணாமலை 2009 - 10
  108. என்.வி. கலைமணி 2009 - 10
  109. கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10
  110. புலவர் த. கோவேந்தன் 2009 - 10
  111. அ. க. நவநீதக்கிருட்டிணன் 2009 - 10
  112. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10
  113. பேரா. மு. இராகவையங்கார் 2009 - 10
  114. பூவை. எசு. ஆறுமுகம் 2009 - 10
  115. பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10
  116. இராய சொக்கலிங்கம் 2009 - 10
  117. இராசம் கிருட்டிணன் 2009-10 (சிறப்புத் தேர்வு)
  118. மணவை முசுதபா 2009-10 (சிறப்புத் தேர்வு)
  119. பேரா. அ. மு. பரமசிவானந்தம் 2010 -2011
  120. பேரா. அ. கிருட்டிணமூர்த்தி 2010 -2011
  121. பேரா. எசு. எம். கமால் 2010 -2011
  122. ப. இராமசாமி 2010 -2011
  123. பேரா. இர. சீனிவாசன் 2010 -2011
  124. வ. சு. செங்கல்வராய பிள்ளை 2010 -2011
  125. கவிஞர் வெள்ளியங்காட்டான் 2010 -2011
  126. நெ. து. சுந்தரவடிவேலு 2010 -2011
  127. முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 2010 -2011
  128. மயிலை சிவமுத்து 2010 -2011
  129. காழி சிவகண்ணுசாமி பிள்ளை 2010 -2011
  130. கே. பி. நீலமணி 2010 -2011
  131. கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் 2010 -2011
  132. அ.திருமலை முத்துசாமி 2010 -2011
  133. எசு. நவராசு செல்லையா 2010 -2011
  134. திரிகூட சுந்தரம் 2010 -2011
  135. பேரா. சுந்தர சண்முகனார் 2010 -2011
  136. தஞ்சை இராமையாதாசு 2010 -2011
  137. கவிஞர் தாராபாரதி 2010 -2011
  138. அருதனக்குட்டி அடிகளார் 2010 -2011
  139. சரோசா இராமமூர்த்தி 2010 -2011
  140. அ. சீனிவாசன் 2010 -2011

[தொகு] குறிப்புகள்

  1. 1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன. 1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன. நாட்டுடைமையாக்கம்: கௌரவமான கேலிக்கூத்தா?, காலச்சுவடு

[தொகு] உசாத்துணை

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி