நாஞ்சில் வள்ளுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஞ்சில் வள்ளுவன் சங்ககாலத்து வள்ளலகளில் ஒருவன் ஆவார். இவன் சிறந்த போர்வீரனாகவும் விளங்கினான். இவனை ஒருசிறைப் பெரியனார், ஔவையார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், மருதன் இளநாகனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் குறிப்பிடுகிறார்.

  • நாஞ்சில் நாடு ஆற்று வளத்தால் கரும்பு விளையும் நிலம். இவனைப் பாடும் புலவர் ஒருசிறைப் பெரியனார் தாம் வேந்தர்களை அறிந்ததில்லை எனவும், இவன் மட்டுமே அறிமுகமானவன் என்றும் குறிப்பிட்டுப் பரிசில் வேண்டுகிறார்.[1]
  • ஔவையார் தன்னிடமிருந்த அடகுக் கீரையோடு சேர்த்துச் சமைத்து உன்பதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டார். அவனோ யானை ஒன்றைப் பரிசாக வழங்கினான். இதனைத் தேற்றா ஈகை(தெளிவில்லாத கொடை) என ஔவை குறிப்பிடுகிறார் [2]
  • தென்கடல் முத்தும், வடகுன்றத்துச் சந்தனமும் இவன் அணிகலன். தென்னவன் வயமறவன் என இவன் போற்றப்படுகிறான். இதனால் இவன் பாண்டியனின் படைத்தலைவன் எனத் தெரிகிறது. பாடலில் இவன் பெயர் வல்வேல் கந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் புலவர்களின் வறுமையைப் போக்குபவன் [3]
  • கிளி ஓட்டும் புனத்தில் விளைந்திருக்கும் கதிர் போல் எல்லாருக்கும் உதவுபவன் என்றும் [4], வேந்தருக்காகப் போரிடுபவன் என்றும் [5] புலவர் மருதன் இளநாகனார் இவனைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறம் 137
  2. புறம் 200
  3. புலவர் கருவூர்க் கதப்பிள்ளை - புறம் 380
  4. புறம் 138
  5. புறம் 139
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_வள்ளுவன்&oldid=2716703" இலிருந்து மீள்விக்கப்பட்டது