நாசிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாசிக் கட்சியின் சின்னம். இது 1933இல் ஜேர்மனியின் அரசியல் சின்னமாகியது.

நாசிக் கட்சி அல்லது தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி (The National Socialist German Workers Party, ஜெர்மன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் ஜெர்மனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.

நாசிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. ஜூலை 28 1921 முதல் இக்கட்சியின் தலைவராக சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். ஜெர்மனிய அதிபர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933இல் ஹிட்லரை நாட்டின் சான்சிலராகத் தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி ஹிட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்