நாகூர் ரூமி
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மீது இரண்டு பேர் எம்ஃபில் ஆய்வு செய்து பட்டமும் பெற்றுள்ளனர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 30 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை.
இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எல்லாத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மொழிபெயர்ப்பு
சிக்மண்ட் ஃப்ராய்டின் உலகப்புகழ் பெற்ற The Interpretation of Dreams நூலைச் சுருக்கமான கனவுகளின் விளக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். அதோடு பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து சூஃபி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது சமீபத்திய ஆதாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான In the Line of Fire என்பதன் தமிழாக்கம். உடல் மண்ணுக்கு என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். கிழக்கு வெளியீடாக வந்துள்ள இதில் ஹோமர் பற்றியும் இலியட் காவியம் பற்றியும் சுவையான முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்காக இவருக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது கிடைத்தது. ஒடிஸியை மொழி பெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
தடங்கள் என்ற பெயரில் இவரது வலைத்தளம் இயங்கி வருகிறது.
[தொகு] இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்
- நதியின் கால்கள் (கவிதைத் தொகுதி, ஸ்நேகா வெளியீடு, சென்னை)
- ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா வெளியீடு, சென்னை)
- குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா வெளியீடு, சென்னை)
- கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா வெளியீடு, சென்னை)
- திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா வெளியீடு, சென்னை).
- திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு வெளியீடு, சென்னை)
- இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு வெளியீடு, சென்னை)
- அடுத்த விநாடி (கிழக்கு வெளியீடு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
- ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
- காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
- கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம் வெளியீடு, சென்னை).
- ஆல்ஃபா தியானம் (ஆல்ஃபா தியானம் பற்றிய விரிவான நூல். ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு வெளியீடு, சென்னை).
- நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம் வெளியீடு, சென்னை).
- மேஜிக் ஏணி, ப்ராடிஜி, சென்னை
- முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை வெளியீடு, சென்னை).
- சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை வெளியீடு, சென்னை).
- சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை)
- இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி வெளியீடு, சென்னை)
- HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
- VALUE EDUCATION (A text book on Value Education. Kathavugal, 2009, Chennai)
- சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
[தொகு] மொழிபெயர்ப்புகள்
- உடல் மண்ணுக்கு(பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்)
- இலியட் -- ஹோமரின் காவியம்
- கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்
- உமர் கய்யாமின் ருபாயியாத்
- கனவுகளின் விளக்கம் -- சிகமண்ட் ஃப்ராய்ட்
- HIDAYATUL ANAM (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)
- செல்வம் சேர்க்கும் விதிகள்" ரிச்சர்ட் டெம்ப்ளர் (கிழக்கு, சென்னை)
- நம்மால் முடியும்" பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை)