நற்கருணை (கத்தோலிக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்கருணை வழங்குதல்.

நற்கருணை கத்தோலிக்க திருச்சபையின் ஏழு அருட்சாதனங்களில் ஒன்றாகும். இயேசு தனது இறுதி இராவுணவின் போது நற்கருணை அருட்சாதனத்தை ஏற்படுத்தினார். திருப்பலியில் அப்பம், திராட்சை இரசத்தை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும் போது இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகிறது என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. நற்கருணை அருட்சாதனத்தை ஆயரோ அல்லது குருவோ வழங்குவார். திருப்பலியில் நற்கருணை திருவிருந்தில் நற்கருணையை குரு, திருத்தொண்டர் அல்லது அருட்சகோதரிகள் வழங்குவர்.ஆலயத்தில் நுழைந்தவுடன் ரோமன் கத்தோலிக்கர்கள் நற்கருணை பேழையின் முன்பாக மண்டியிட்டு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை வணங்கி ஆராதிக்கின்றனர். இயேசுவின் பிரசன்னத்தை உணர்த்தும் வண்ணம் நற்கருணை பேழையின் அருகில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

இயேசுவின் இறுதி இராவுணவு[தொகு]

முதன்மைக் கட்டுரை: இயேசுவின் இறுதி இராவுணவு

இயேசு தனது இறுதி இராவுணவின் போது நற்கருணை அருட்சாதனத்தை ஏற்படுத்தி, அவரது நினைவாக அதை செய்ய சொன்னார். இதைப்பற்றி மத்தேயு நற்செய்தியாளர் அதிகாரம் 26, 26 முதல் 29 வரை உள்ள வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார்.பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

ஆதாரங்கள்[தொகு]

கத்தோலிக்க மறைக்கல்வி- நற்கருணை அருட்சாதனம்

கத்தோலிக்க மறைக்கல்வி

நற்கருணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்கருணை_(கத்தோலிக்கம்)&oldid=2067609" இலிருந்து மீள்விக்கப்பட்டது