நரந்தம்பழம்
நரந்தம்பழம் எனப்படுவது செம்மஞ்சள் கோள வடிவ சாறுள்ளப் பழ வகையாகும். இதனை "தோடம்பழம்" எனவும் அழைக்கப்படுகிறது. நரந்தம்பழமரங்கள் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இப்பழங்களில் C ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். நரந்தம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. நரந்தபழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகிய பிரபலமான வகைகள் உள்ளன.
நரந்தம்பழங்களில் பல மருத்தவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்களில் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய நற்பண்புகள் கொடுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம் பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்க வல்லது. தோடம் பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறது.