வணங்கும் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நமஸ்காரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்து சமயத்தில் இறைவனை வணங்கும் முறைகள் (நமஸ்காரம்) ஐந்து உள்ளன. இவை பொதுவாக வணங்கும் பொழுது பயன்படுத்தப்படும் உடல் அங்கங்களின் எண்ணிக்கையும், செயல்பாடுகளையும் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கோயில்களின் கருவறை, கொடிக்கம்பம் போன்ற இடங்களில் எவ்வகையான வணங்கும் முறை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், ஆண் மற்றும் பெண் எவ்வகையான வணங்கும் முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் வரையறை செய்துள்ளார்கள். பெரும்பாலும் இவ்வரையறைப் படியே இந்துக்கள் வணங்குகிறார்கள்.

வணங்கும் முறைகள்[தொகு]

இவை ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் என வணக்கும் பொழுது பயன்செய்யும் உடல் அங்கங்களைப் பொறுத்து பெயரிடப்பட்டுள்ளன.[1]

  1. ஓரங்க நமஸ்காரம் - தலை குனிந்து வணங்குவது
  2. மூன்று அங்க நமஸ்காரம் - தலைமீது இரு கைகளையும் கூப்பி வணங்குவது
  3. பஞ்சாங்க நமஸ்காரம் - தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
  4. அஷ்டாங்க நமஸ்காரம் - தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
  5. சாஷ்டாங்க நமஸ்காரம் - தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
இருகைகளையும் தலைமீது கூப்பி வணங்கும் மூன்று அங்க நமஸ்காரம்

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=18845 நமஸ்காரங்கள் எத்தனை வகை? தினமலர் கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணங்கும்_முறை&oldid=1881349" இலிருந்து மீள்விக்கப்பட்டது