நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புமுகம்மது மெஹ்தி
கதைமோசன் மக்மால்பஃப்
நடிப்புஎஸ்ஸாதோலா என்திஸாமி, மெஹ்தி ஹாஸிமி
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா (Nasseroddin Shah Actor-e Cinema‎ ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியது. இத்திரைப்படம் ஒன்ஸ் அப்பான் அ டைம், சினிமா (Once Upon a Time, Cinema) எனும் ஆங்கிலப் பெயருடன் வெளியானது. இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை எழுதி இயக்கியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார்.

திரைப்படத்தைப் பற்றி[தொகு]

இது ஒரு நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பழைய ஈரானியத் திரைப்படங்களின் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது கருப்பு- வெள்ளைத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் 1991 ஆம் ஆண்டில் வெளியானது.

விருதுகள்[தொகு]

இத்திரைப்படம்,

  • இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா விருது
  • கார்ல்வி வேரி (Karlovy Vary) சர்வதேச திரைப்பட விழா விருது [1]

ஆகிய இரு விருதுகளைப் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Once Upon a Time, Cinema". Makhmalbaf Film house. Archived from the original on மே 1, 2006. பார்க்கப்பட்ட நாள் April 28, 2006.