நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கை, நம்பி, ஈரர், திருனர் தொடர்பாக சுதந்திரவாத பார்வைகள் தனிமனித உரிமையில் அரசு தலையிடாமல் இருப்பதை அடிப்படையாக் கொண்டவை.

சுதந்திரவாதக் கட்சிகள் வயது வந்தவர்களுக்கு இடையிலான இணக்கப்பாட்டில் அமைந்த எந்தவித பாலியச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் எல்லாச் சட்டங்களையும் நீக்குவதைப் பரிந்துரை செய்கிறன. அரசு ஒருவரின் பாலிய அமைவைக் கொண்டு அவரை எந்த விதத்திலும் வேறாக நடத்தக் கூடாது. எ.கா திருமணம், பிள்ளை வளர்ப்பு, தத்தெடுத்தல், படைத்துறைச் சேவை என எந்த செயற்பாட்டிலும் எந்தவித வேறுபாடும் காட்டக் கூடாது என்று பரிந்துரை செய்கின்றன.

ஒட்டு மொத்தத்தில் சுதந்திரவாதிகள் நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோரின் உரிமைகளுக்கு மிகச் சார்பான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.