நங்கவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நங்கவள்ளி
—  பேரூராட்சி  —
நங்கவள்ளி
இருப்பிடம்: நங்கவள்ளி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75, 77.88அமைவு: 11°45′N 77°53′E / 11.75, 77.88
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,610 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


385 மீட்டர்s (1 அடி)

நங்கவள்ளி (ஆங்கிலம்:Nangavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11.75° N 77.88° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385 மீட்டர் (1263 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நங்கவள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.நங்கவள்ளி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாக கொண்டது.இங்கு ஞாயிறு தோறும் வாரச் சந்தை கூடுகிறது.நங்கவள்ளிக்கு மிக அருகில் வனவாசி என்ற பேரூராட்சி உள்ளது.வனவாசியில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளது.

திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்[தொகு]

இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில்,நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும்.இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும்.ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொழுதுபோக்குகள்[தொகு]

நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. "Nangavalli". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=நங்கவள்ளி&oldid=1556252" இருந்து மீள்விக்கப்பட்டது