நங்கமங்களம்

ஆள்கூறுகள்: 13°13′N 79°06′E / 13.21°N 79.1°E / 13.21; 79.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்கமங்களம்
நங்கமங்களம்
இருப்பிடம்: நங்கமங்களம்

,

அமைவிடம் 13°13′N 79°06′E / 13.21°N 79.1°E / 13.21; 79.1
நாடு  இந்தியா
மாவட்டம் சித்தூர் மாவட்டம
மக்களவைத் தொகுதி நங்கமங்களம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நங்கமங்களம் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் (கிராமம்).

இக்கிராமம், ஆந்திர, தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் தமிழும் தெலுங்கும் பேசுவர். காட்பாடி திருப்பதி் ரயில்பாதையும் சென்னை மும்பை தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். இக்கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் நகருக்கும் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நகரத்திற்கும் பேருந்து சேவைகள் நிறைய உண்டு. பொம்மசமுத்திரம் ரயில் நிலையம் நங்கமங்களத்தின் அருகிலேயே உள்ளதால் ஆந்திர மாநிலம் திருப்பதி் நகருக்கும் தமிழ்நாட்டிலுள்ள காட்பாடி நகரத்திற்கும் ரயில் சேவையும் உண்டு.

இக்கிராமம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பதாக தோன்றியிருக்கக்கூடம் என்றுக் கருதப்படுகிறது. அச்சமையத்தில் வேலூரை ஆண்ட பொம்மிநாயக்கன் ஆட்சிக்குள் வந்த இப்பகுதியில் குண்டூர் மற்றும் நெல்லூர் நகரங்களைச் சேர்ந்த ரெட்டிக்கள் வந்து குடிப்பெயர்ந்தார்கள். இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் வேளான்மையையே நம்பி வாழ்கிறார்கள். கரும்பு, வேர்க்கடலை (கடலைக்காய்), நெல் மற்றும் தேங்காய் பயிரிடப்படுகிறது. இக்கிராமத்தைச் சுற்றி மலைகளும், கிராம எல்லையில் ஒரு ஓடையும் உள்ளன.

இக்கிராமத்தில் இரண்டு பகுதிகள் - கிறிஸ்தவப் பகுதி, இந்துப் பகுதி - உள்ளன. இவ்விருப் பிரிவுகளும் ஒன்றிலிருந்து ஒன்று அறை கிலோ மீட்டர் இடைவேளியில் உள்ளன. கிறிஸ்தவப் பகுதியில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். இப்பகுதியின் மையப்பகுதியில் தென் இந்தியத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு தேவாலையம் உள்ளது. இத்தேவாலையம் வேலூர் டையஸீஸின் கீழ் வருகிறது. இந்துப் பகுதியில் இராம‌லையம் என்ற தர்மராஜருக்கான ஒரு கோவிலும் அமவர் ரேனுகாம்பாவிற்கான ஒரு கோவிலும் உள்ளன. நங்கமங்களத்தின் அருகில் சீயோன் திருமலை என்கின்ற கிறிஸ்தவர்களுக்கான ஒரு புனித இடம் உண்டு. இம்மலையின் மேல் ஒரு புனித தேவாலையம் உண்டு. ஆண்டுதோறும் இவ்விடத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்கும் சீயோன் திருவிழா நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nangamangalam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கமங்களம்&oldid=2923925" இலிருந்து மீள்விக்கப்பட்டது