த டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட்
குறுவட்டு அட்டை
இயக்கம்ஜெ பால்க்சன்
தயாரிப்புஅட்ரியன் சடுர்கேஷ்
கதைஜெ பால்க்சன்
நடிப்புகெம்மா அர்டேர்டன்
மார்ட்டின் கம்ப்ச்டன்
எட்டி மார்சன்
படத்தொகுப்புமார்க் எச்கேர்ச்லி
கலையகம்இஸ்ரேல் ஆப் மேன் பிலிம்
சினிமாஎன்எஸ்
விநியோகம்வெஸ்ட் என்ட் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 12, 2009 (2009-09-12)(TIFF)
30 ஏப்ரல் 2010 (United Kingdom)[1]
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்US $811,930

த டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் 2009ல் வெளிவந்த பிரித்தானிய திகில் திரைப்படமாகும். இதனை ஜெ பால்க்சன் எழுதி இயக்கியிருந்தார். ஒரு இளம் பெண்ணை (கெம்மா அர்டேர்டன்) இரு பழைய குற்றவாளிகள் (மார்ட்டின் கம்ப்ச்டன், எட்டி மார்சன்) கடத்துவதாக இப்படம் உருவாக்கப்பட்டது..[2][3]

கதை[தொகு]

விக் என்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளரும், டேனி என்ற இருபால்சேர்கைகயாளரும் இணைந்து ஆலிஸ் என்ற பணக்கார இளம்பெண்ணை கடத்துகின்றார்கள். அவளை சத்தம் வெளியேரா அறையொன்றில் கைகளையும், கால்களையும், வையையும் கட்டி பிணையக் கைதியாக வைக்கின்றார்கள். அவளை நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள். விக் வீட்டிலிருந்து வெளியேரும் தருணத்தில் நடந்தேரும் சம்பவத்தால் கடந்திவந்தவர்களில் ஒருவன் தன்காதலன் டேனி என்பதை, ஆலிஸ் அறிந்து கொள்கிறாள். அதன்பின் ஆலிஸிடம் தங்களுடைய திட்டங்கள் அனைத்தையும் டேனி கூறிவிடுகிறான். இதனை விக்கிடம் கூறாமல் மறைத்துவிடுகிறான்.

மீண்டும் விக் வெளியில் செல்லும் போது ஆலிஸூம், டேனியும் உறவு கொள்ள எத்தனிக்கின்றார்கள். அச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தப்ப நினைக்கின்றாள். 911 என்ற அமெரிக்க அவசர உதவியை அழைக்கின்றாள். ஆனால் அவர்களால் உதவி செய்ய இயலாமல் போய்விடுகிறது, ஆனால் டேனியிடமே வீட்டின் சாவி இருப்பதால் அவனை அனுகும் பொழுது மீண்டும் பிடிபடுகின்றாள். ஆலிஸை இடமாற்ற விக் முயலும் பொழுது ஆலிஸின் ஆடையிலிருந்து டேனியின் கைபேசி கீழே விழுகிறது. அக்கைபேசியில் காவல்துறைக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு பயமும் கோபமும் கொள்ளும் விக், நடந்ததை ஆலிஸிடம் வன்முறையை கையாண்டு அறிந்து கொள்கிறான்.

அதன் ஆலிஸை இடம்மாற்றும் திட்டத்தினை நிறைவேற்றி, டேனியை கொல்ல முயல்கிறான். அதிலிருந்து காயங்களுடன் தப்பும் டேனி, விக்கை கொன்று பணத்துடன் தப்புகிறான். ஆலிஸையும் காப்பாற்றாமல் சென்றதைக் கண்ட விக், தான் உயிரிழக்கப் போகும் தருணத்தில் அவளிடம் சாவியை கொடுக்கிறான். அங்கிலிருந்து வெளியேரி சாலையில் நடந்து வருகையில் டேனி ஓட்டிவந்த காரிலேயே இறந்துகிடப்பதை காண்கிறாள், பின் அவனை கீழே தள்ளிவிட்டு காரினை எடுத்துக் கொண்டு பயணிக்கிறாள்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]