த. சா. அப்துல் லத்தீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. சா. அப்துல் லத்தீப்
T.S. ABDUL LATHEEF
இலங்கையில் முதன் முதல் பயிற்றப்பட்ட தமிழ் முஸ்லிம் ஆசிரியர்
பிறப்புஅப்துல் லதீப்
(1900-04-09)ஏப்ரல் 9, 1900
மதுராப்புர, வெலிகம, இலங்கை
இறப்புமார்ச்சு 10, 1977(1977-03-10) (அகவை 76)
இருப்பிடம்இலங்கை
பணிஆய்வாளர், ஆசிரியர்
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
தல்ஹா பீபி

த. சா. அப்துல் லத்தீப் (T. S. Abdul Latheef, ஏப்ரல் 9, 1900 - மார்ச் 10, 1977) இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழ் ஆசிரியர்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

மர்ஹூம் அல்ஹாஜ் த.சா. அப்துல் லத்தீப் இலங்கை தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்புர எனும் ஊரைச் சேர்ந்தவர். வெலிகம அரசினர் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஆசிரியராக நியமனம் பெற்ற அவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் (1923 - 1925) பயிற்சி பெற்றுள்ளார். யாழ்ப்பாண மக்களால் 'தமிழிற் சூரியன்' எனும் பட்டம் வழங்கப்பட்டவர். இவரை ஆசிரியத் தந்தை என்றும் அழைப்பர். இவர் அறபா தேசிய பாடசாலை யி்ல் 8ஆவது தலைமை ஆசியராக (1935-1946)கடமையாற்றியுள்ளார்.

சேவையாற்றிய பாடசாலைகள்[தொகு]

  • வெலிகம முஸ்லிம் வித்தியாலயம் (தற்போதைய அறபா தேசிய பாடசாலை) - உதவியாசிரியர் : 1921
  • காலி மல்ஹருஷ் சுல்ஹியா வித்தியாலயம் - உதவியாசிரியர் : 1925
  • மாத்தறை முஸ்லிம் பாடசாலை (தற்போதைய தாருல் உலூம் மகா வித்தியாலயம்) - உதவியாசிரியர் : 1928
  • வெலிகம முஸ்லிம் வித்தியாலம் - தலைமையாசிரியர் : 1935 - 1946
  • திக்குவல்லை முஸ்லிம் வித்தியாலயம் (மின்ஹாத் வித்தியாலயம்) - தலைமையாசிரியர் : 1946
  • களுத்துறை முஸ்லிம் பாடசாலை - தலைமையாசிரியர் : 1948 - 1958.05.01

எழுதிய நூல்கள்[தொகு]

  • நபிகள் நாதர் முகம்மது (ஸல்) உலக இரட்சகத் தூதர் (1936)[2]
  • திருக்குர்ஆனும் இயற்கையும் -ஆய்வு நூல் (1971)[3]

சமூக சேவைகள்[தொகு]

  • 1942 இல் மதுராப்புரவில் “இஸ்லாமிய கைரியாத்“ எனும் சங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் உருவாக காலாய் நின்றார்.
  • 1972 ஆம் ஆண்டு மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம் உருவாவதற்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு நல்கியவர்களுள் இவரும் ஒருவர்.
  • வெலிகம அறபா வித்தியாலயத்தின் தமிழ் மொழிப் பிரிவை மேம்படுத்தினார். இவர் காலத்தில் அறபா மின்னென மின்னியது.

உசாத்துணை[தொகு]

  1. http://noolaham.net/project/39/3840/3840.pdf}[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=71288&query_desc=kw%2Cwrdl%3A%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=71265&query_desc=kw%2Cwrdl%3A%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://noolaham.net/project/39/3840/3840.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._சா._அப்துல்_லத்தீப்&oldid=3368940" இலிருந்து மீள்விக்கப்பட்டது