தோவாளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோவாளை
நாடு  India
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கன்னியாக்குமரி
மக்கள் தொகை
 - கிராமம் A,rou
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
அ.சு.எ 629302
அருகில் உள்ள நகரம் நாகர்கோவில்
லோக் சபா தொகுதி கன்னியாக்குமரி

தோவாளை தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் திருநெல்வேலி நாகர்கோவில் நெடுஞ்சாலையின் அருகே ஆரல்வாய்மொழி மற்றும் வெள்ளமடம் ஆகிய இரு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் நாகர்கோவில் ஆகும். இந்த ஊரின் மக்கள்த்தொகை 6000. மலர்களை உற்பத்தி செய்வதில் இந்த நகரம் இந்திய அளவில் பிரபலமான ஒன்று. இங்கு உற்பத்தி செய்யும் மலர்களில் மல்லிகையே மிக முக்கியமான மலர். அம்மலரில் (பிச்சி வெள்ளை அல்லது பிச்சிப் பூ) என்பதே இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சுற்றுப் பகுதி மலர் சாகுபடியாளர்களின் மலர் விற்பனைச் சந்தை இந்த ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள மலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது.

முக்கியத் தொழில்கள்[தொகு]

இந்த ஊரில் நெல் விவசாயம், மலர் சாகுபடி மற்றும் செங்கல் சூளை ஆகியவை மிக முக்கியத் தொழில்களாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தோவாளை&oldid=1712515" இருந்து மீள்விக்கப்பட்டது