தோற்ற மெய்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோற்ற மெய்மை (Virtual reality) என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது கணினி விளையாட்டுகளிலும், திரைப்படங்களிலும் அதிகமாகவும், இராணுவம், வானியல் போன்றவற்றில் குறைவாகவும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பம்.
உதாரணம் [தொகு]
தோற்ற மெய்மை கணினி விளையாட்டு
வலப்பக்கம் தோற்ற மெய்மை கணினி விளையாட்டு விளையாடும் சிறுவன் உண்மையில் உலகத்தின் ஒரு அறையில் அமர்ந்து கண்ணில் தோற்ற மெய்மைக்கான கண்ணாடியை மட்டும் மாட்டியிருப்பான். ஆனால் அவன் கண் மூலம் பார்க்கும் போது அவன் அந்தரத்தில் வானில் கோள்களின் வழியாக அல்லது ஊடாக பறப்பது போல் தெரியும்.
சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் [தொகு]
தோற்ற மெய்மை கணினி விளையாட்டுகள் விளையாடும் குழந்தைகள், உண்மையான மைதானத்தில் விளையாடும் அளவுக்கு பக்குவம் பெறுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.[1]
மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]
- ↑ Vasudha Venugopal (November 7, 2011). "From play fields to virtual reality". thehindu.com (சென்னை). http://www.thehindu.com/news/cities/Chennai/article2605904.ece. Retrieved டிசம்பர் 26, 2012.