தோப்பு வெங்கடாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோப்பு வெங்கடாச்சலம்
வருவாய்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
பதவியில்
2011–2016
முன்னையவர்இ. பெரியசாமி
பின்னவர்ஆர். பி. உதயகுமார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
2011–2021
முன்னையவர்C. பொண்ணுதுரை
பின்னவர்S. ஜெயக்குமார்
தொகுதிபெருந்துறை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

தோப்பு வெங்கடாச்சலம் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர். பெருந்துறை தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] பதினான்காவது சட்டமன்றத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] 2016 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிமுகவினால் மறுக்கப்பட்டதால், இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[3]

இவர் 11 ஜூலை 2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  3. இளங்கோவன்,க .தனசேகரன், நவீன். "சுயேச்சையாகக் களமிறங்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்? - ஈரோடு அதிமுக-வில் பரபரப்பு". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பு_வெங்கடாச்சலம்&oldid=3628139" இலிருந்து மீள்விக்கப்பட்டது