தோட்டியின் மகன் (புதினம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோட்டியின் மகன்(புதினம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தோட்டியின் மகன்(புதினம்) | |
|---|---|
| நூல் பெயர் | தோட்டியின் மகன் |
| நூல் ஆசிரியர் | மலையாளதில் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழில் சுந்தர ராமசாமி |
| வகை | மொழிபெயர்ப்பு இலக்கியம் |
| காலம் | ஆகஸ்ட் 2000 |
| இடம் | தமிழ் நாடு |
| மொழி | தமிழ் |
| பதிப்பகம் | காலச்சுவடு பதிப்பகம் |
| பக்கங்கள் | 175 |
| ஆக்க அனுமதி | பி.கமலாட்சி அம்மா |
'தோட்டியின் மகன்' எனும் நாவல் மலையாளத்தில் 1946 களில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் மொழிபெயர்ப்பாகும்.இதனை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.1957 களில் சரஸ்வதி இதழில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டபொழுதும், 2000ம் ஆண்டில்களில்தான் இக் கதை நாவலுரு பெற்றது.
ஆழப்புழை நகரசபையில் மலமள்ளும் தொழிலினை செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கையினை பற்றியும் அவர்களின் உணர்வுகள்,வெளிப்பாடுகள் போன்றவற்றினை மையமாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது.