தொழிலிடை பொறியியல் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலிடை பொறியியல் கல்வி (Sandwich Engineering course) பொறியியல் கல்வி முறையில் வழங்கும் ஒரு பாடவடிவமைப்பு திட்டம் ஆகும்.

விளக்கம்[தொகு]

இத்திட்டத்தில் உள்ள பாடவடிவமைப்பு இடையீட்டு ரொட்டி போல் இருப்பதால் இதற்கு தொழிலிடை பொறியியல் என்று பெயர் வந்தது. இதன்படி தொழிற்பயிற்சி அரையாண்டு போது இதில் பயிலும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி மூலம் பரிந்துரைக்கப்படும் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவர். அவ்வரையாண்டின் போது மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரியின் கண்காணிப்பின் கீழ் மாணவர்கள் பெறும் தொழிற்பயிற்சிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எடுத்துக்காட்டு
தேர்வு வருடம் பயிற்சி இடையீட்டு ரொட்டி பகுதியோடு ஒப்பீடு
முதல் வருடம் பாடத்திட்டம் ரொட்டி
மூன்றாம் அரையாண்டு தொழில் பயிற்சி காய்கறிகள்
நான்காம் அரையாண்டு பாடத்திட்டம் ரொட்டி
ஐந்தாம் அரையாண்டு தொழில் பயிற்சி காய்கறிகள்
ஆறாம் அரையாண்டு பாடத்திட்டம் ரொட்டி
குறிப்பு

மேலுள்ள எடுத்துக்காட்டு இந்தியாவின் கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழக தொழிலிடை பல்தொழில்நுட்ப கல்லூரியில் (CIT Sandwich Polytechnic College) பின்பற்றப்படும் பாடத்திட்டம் ஆகும். மற்ற கல்லூரிகளில் இம்முறை மாறுபடலாம்.

வெளியிணைப்புகள்[தொகு]