தொழிற்பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக் கொண்டுள்ளது.[1] இவற்றில் செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம். தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றிப் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் இந்த ஆறாகவும் பகுத்துக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர்.

செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன தொழிற்பெயர்.

சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் பொருட்புணர்ச்சி எனலாம்.

சொற்புணர்ச்சியில் தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர்.
முதனிலையை [2] நோக்கி

  1. முதனிலைத் தொழிற்பெயர்
  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - எனவும், விகுதியின் அடிப்படையில்
  3. விகுதி குன்றிய தொழிற்பெயர்
  4. விகுதி குன்றாத தொழிற்பெயர் - எனவும் பகுத்துக்கொளவர்.

எடுத்துக்காட்டு[தொகு]

குறியீடு எடுத்துக்காட்டு
முதனிலைத் தொழிற்பெயர் இசை

மொழி
வாழ்த்து
அடி
வணங்கு பாராட்டு

முதனிலை திரிந்த தொழிற்பெயர் விடுதல் < வீடு
பெறுதல் < பேறு
சுடுதல் < சூடு
விகுதி குன்றிய தொழிற்பெயர் பாடுதல் > பாடு
ஆடுதல் > ஆடு [3]
நடத்தல் > நடை
நிற்றல் > நிலை
விகுதி குன்றாத தொழிற்பெயர் நினைத்தல்
ஏற்றுமதி
ஆட்டம்
நிற்றல்
நடப்பு

வினையடி: நட+விகுதி: தல் = தொழிற்பெயர்: நடத்தல்.1

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்
  2. சொல்லின் முதலெழுத்து
  3. ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பு - புறநானூறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்பெயர்&oldid=3412689" இலிருந்து மீள்விக்கப்பட்டது