தொடர் ஒருதுணை மணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர் ஒரு துணை மணம் என்பது விவாகரத்திற்கான இலகுவான வழியாகப் பல சமூகங்கள் கருதுகின்றன. பெரும்பாலான மேற்குலக நாடுகளில் விவாகரத்து என்பது கிட்டத்தட்ட 50 சதவீதமாகக் காணப்படுகிறது. இவர்கள் மூன்று தடவைகள் வரை திருமணம் செய்கின்றனர். விவாகரத்து மற்றும் மறுதிருமணம் என்பது 'தொடர் ஒருதார மணத்தில்' ஈடுபடுவதற்கான அடிப்படைக் காரணியாகும். இவர்கள் பல திருமணங்களைப் புரிந்தாலும் ஒரு நேரத்தில் தமக்கென ஒரேயொரு வாழ்க்கைத் துணையை மட்டுமே கொண்டிருப்பார்கள். கரிபியன், மொறிசியஸ், பிரேசில் போன்ற நாடுகளில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர் ஒரு தார மணத்தில் இணைவ அதிகமாகக் காணப்படுகிறது. இவ்வகையான மணத்தில் 'முன்னால்' எனப் பிறிதொரு வகையான உறவு முறைப் பதம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முன்னாள் மனைவி மற்றும் முன்னாள் கணவன் எனக் கூறப்படுகிறது. முன்னாள் கணவனின் வாழ்க்கை ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுமைக்கும் ஏதோவொரு விதத்தில் தொடர்பைக் கொண்டிருக்கும். ஏனெனில் இந்தக் கணவனுக்குப் பிறந்த குழந்தை குறித்த பெண் மறுதிருமணம் செய்த பின்னரும் இவருடன் வாழ்வதால் இந்தப் பிள்ளையின் நலனில் முன்னாள் கணவனின் பராமரிப்பும் தொடர்பாடலும் காணப்படும். தொடர் ஒருதார மணம் என்பது 'நீண்ட குடும்பத்தை' உருவாக்குவதாக பொப் சிம்ப்சன் குறிப்பிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_ஒருதுணை_மணம்&oldid=2077402" இலிருந்து மீள்விக்கப்பட்டது