தேவர் செயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2007ஆம் ஆண்டு தேவர் செயந்தி விழாவின்போது மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

தேவர் செயந்தி (தேவர் ஜெயந்தி) என்று ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் தேவர் குலத்தவர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1][2] இந்நாள் ஒரு பொதுவிடுமுறையாக இல்லாதிருப்பினும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளும் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.[3][4][5][6]

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியான அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்நாளை தமழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது. [7]

இந்த நிகழ்வு சாதியத்தை வளர்ப்பதாக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலைக் கட்சியினர் தமிழக அரசின் அரசுமுறை புரத்தலை எதிர்த்து வருகிறது.[8]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்_செயந்தி&oldid=1385648" இருந்து மீள்விக்கப்பட்டது