தேன் நிலவு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேன் நிலவு | |
|---|---|
| இயக்குனர் | ஸ்ரீதர் |
| தயாரிப்பாளர் | ஸ்ரீதர் சித்ராலயா |
| கதை | ஸ்ரீதர் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜெயந்திமாலா |
| இசையமைப்பு | ஏ. எம். ராஜா |
| வெளியீடு | செப்டம்பர் 30, 1961 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தேன் நிலவு 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா வின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை புகழ் பெற்றவை. தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காஷ்மீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.