தேசிய அடையாள அட்டை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தேசிய அடையாள அட்டை
முக்கிய விடயங்கள் மறைக்கப்பட்ட மாதிரி தேசிய அடையாள அட்டை (முன் பக்கம்)
முக்கிய விடயங்கள் மறைக்கப்பட்ட மாதிரி தேசிய அடையாள அட்டை (முன் பக்கம்)
வழங்கியோர்  Sri Lanka
ஆவண வகை அடையாள அட்டை
நோக்கம் அடையாளப்படுத்தல்
பெற்றுக் கொள்ளத் தேவையானவை இலங்கை குடியுரிமை
காலாவதி பொருந்தாது

தேசிய அடையாள அட்டை (சுருக்கம்: தே.அ.அ) என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும். இலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும். தேசிய அடையாள அட்டை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது. ஆட்களைப் பதிவு செய்தல் சட்ட இலக்கம் 1968 இன் 32 சேர்க்கப்பட்ட சட்ட இலக்கங்கள் 1971 இன் 28 மற்றும் 37, சட்ட இலக்கம் 1981 இன் 11 ஆகியவற்றால் தேசிய அடையாள அட்டை பாவனை மற்றும் வெளியீடு சட்டமாக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய அடையாள அட்டை வைத்திருத்தல் எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாகவுள்ளது. பாதுகாப்புப் பிரிவினருக்கு சோதனை மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இது காட்டப்படல் வேண்டும். இது தவறும்பட்சத்தில் தடுத்து வைக்கப்பட முடியும். சில அரச நடைமுறை மற்றும் வணிப பரிமாற்றல்களின்போது இது முக்கிய ஆவணமாகவுள்ளது. இது தவறும்போது குறிப்பிட்ட விடயங்கள் தடுக்கப்படலாம். கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 16க்கு மேல்), சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 18க்கு மேல்) மற்றும் தேர்தல் வாக்களித்தலின்போதும் (வயது 18க்கு மேல்) இது முக்கிய ஆவணமாகும்.[2]

தேசிய அடையாள அட்டை இலக்கம்[தொகு]

ஒவ்வொரு தேசிய அடையாள அட்டையும் தனித்த 10 குறிகளைக் கொண்டு, இதன் அமைப்பு 000000000அ (0 வரும் இடங்களில் எண்களும், அ வருமிடத்தில் ஓர் ஆங்கில எழுத்தும்) போன்று காணப்படும். முதல் மூன்று குறிகளும் குறித்த நபரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்களைக் குறிக்கும்(எ.கா: 1988 ஆம் ஆண்டு எனில் 88xxxxxxxx). கடைசி எழுத்து பொதுவாக 'V' அல்லது 'X' என்று காணப்படும். இந்த இலக்கம் தனியொருவரை அடையாளப்படுத்தும் தனித்துவமான இலக்கம். இது அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு இலக்கத்தை ஒத்தது.

அடையாளப்படுத்தல்[தொகு]

 1. அட்டையின் மேல் மையத்தில் "இலங்கை" என்ற எழுத்து சிங்களத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
 2. அட்டையின் மேல் வலது பக்கத்தில் ஊதா நிறத்தில் எண் தே.அ.அட்டைக்கு விண்ணப்பித்தவரின் மாகாணத்தைக் குறிக்கும். இந்த எண்கள் 1-9 வரை காணப்படும். இவ்வெண்கள் பின்வருமாறு மாகாண அடிப்படையில் அமைந்திருக்கும்:
 • 1. மேற்கு மாகாணம்
 • 2. மத்திய மாகாணம்
 • 3. தெற்கு மாகாணம்
 • 4. வடக்கு மாகாணம்
 • 5. கிழக்கு மாகாணம்
 • 6. வடமேற்கு மாகாணம்
 • 7. வட-மத்திய மாகாணம்
 • 8. ஊவா மாகாணம்
 • 9. சபரகமுவா மாகாணம்

சிறுபான்மையினரும் தேசிய அடையாள அட்டையும்[தொகு]

இனப்பிரச்சனை யுத்தமாக நடந்த கொண்டிருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டையினையே முக்கிய ஆவணமாகக் கொண்டிருந்தனர்.[3]

உசாத்துணை மற்றும் வெளி இணைப்பு[தொகு]

 1. "Sri Lanka to issue new ID cards from November". Department of Government Information - Sri Lanka (17 September 2013).
 2. [1]இலங்கை மக்களின் முக்கிய ஆவணம் தேசிய அடையாள அட்டை
 3. [2]இலங்கையில் தேசிய அடையாள அட்டையும் அதன் பிரயோகமும்

இதனையும் பார்க்க[தொகு]