தேசபக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தேசபக்தி பக்தி என்பது அன்பின் மேலானதொரு நிலையாம். பக்தியைத் தெய்வீக மணம் வீசும் பூக்களை மலரச் செய்கின்ற ஒரு பூங்கொடிக்கு நிகராகக் கூறலாம். அந்தப் பக்திக் கொடியானது மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களோடு இவர்களை நமக்குக் கொடுத்த தான நாம் பிறந்த பொன்நாடு ஆகிய கொழுகொம்புகளில் எதைப் பற்றிப் படர்ந்திருந்தலும் அது மேலாம் பலனைத்தரும் [1].

நம் தேசம் என்றால் இந்த மண், மலை, காடு,மனிதர், பறவைகள், விலங்குகள் முதலியவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதாகாது.'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்' என்ற குறளில் உலகம் என்பது உலகிலுள்ள சான்றோர்களை மட்டும் குறிப்பிடுவதைப் போல், தேசம் என்பது நம் தேசத்திலுள்ள ஞானிகள், தவ யோகிகள், தியாக முர்த்திகள், தேச பக்தர்கள் ஆகிய மேன்மக்களைச் சுட்டுவதாகும். அவர்களின் சந்நிதியில் பிறந்ததற்காக நாம் ஆண்டவனை நன்றியோடு வணங்குகிறோம். நம் மூதாதையர் களான இப்பெருமக்கள் உலக வாழ்வில் தாம் பெறக்கிடைத்த இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு சோதனைக்குள்ளாவதான ஆன்மீக வாழ்க்கையையே மேற்கொண்டு வாழ்ந்தார்கள். அதற்காக அவர்கள் தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணம் பண்ணிவிட்டுத் தூயதாம் பக்தி வாழ்க்கையில், தியாக வாழ்க்கையில் மூழ்கித் தோய்ந்தார்கள். தர்மம், நீதி, சத்தியம் ஆகியவற்றையே அவர்கள் கடவுளாகக் கண்டார்கள்.

அன்னியர் படைஎடுப்பால் சில நூற்றாண்டுகள் அடிமைப்பட்டும் துன்புற்றும் வாழ்ந்த அந்தக் காலத்திலும் நம்முடைய உயர்ந்த குறிக்கோளும் பண்பட்ட வாழ்க்கை முறையும், தெய்வ பக்தியுமாகிய நந்தா விளக்கானது அணையமல் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஆகையால் அந்த நீண்ட ஆண்டுகளை 'இருண்டகாலம்' என்று வர்ணித்த ஓரஞ்சார்ந்த வரலாற்று ஆசிரியர்களின் கூற்றில் உண்மை ஏதும் இல்லை. நாம் அரசியல் சுதந்திரம் பெற்று சுதந்திர மக்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், நம் மேலாம் பழைய பண்புகளையும் ஆன்மீக வாழ்க்கை இலட்சியங்களையும் இழந்து மேலை நாட்டு நாகரீ கத்தில் மூழ்கி, அமிழ்ந்து, அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். அந்த மயக்கத்திலிருந்தும் அழிவிலிருந்தும் நம் இளைய தலைமுறையினர் விடுபடவேண்டும். இங்கே நம் புண்ணிய பூமி பெற்றெடுத்த தியாக மூர்த்திகளின் வரலாறுகளின் சிலவற்றைக் காண்போம்.

பொருளடக்கம்

[தொகு] பாலகங்காதர திலகர்

பாலகங்காதர திலகர் அவர் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற, கணிதப் பாடத்தில் மிகச் சிறப்பாக முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன். அவன் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில விண்ணப்பித்தான். அவனுடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவும், " அன்பு மாணவனே! நீ கணிதத்தில் மிகவும் திறமை பெற்றிருப்பது தெரிகின்றது. நீ கணிதப் பிரிவில் சேர்ந்து கணிதத்தையே சிறப்புப் பாடமாகக் கற்பாயாகில், நீ மிகவும் மேலாம் நிலையினை அடைவாய். அதன் மூலம் உனக்கு ஒளிமிகுந்த எதிர் காலம் அமையும். அதற்கு மாறாக நீ சட்டம் படிப்பாயானால் நீ அடையும் பயன் குறைவாகவே இருக்கும். நீ யோசித்து உன்முடிவைச் சொல்" என்று அவனுக்கு விளக்கிக்கூறினர். அதற்கு மாணவன் பணிவோடு" ஐயன்மீர்! தாங்கள் கூறிய அனைத்தும் சரிதான். ஆனால், என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத் தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடு கின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக் கத் தக்கவர்களான தேச பக்தி மிகுந்த வழக்குறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாகவேண்டும். அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் பயில வந்தேன். அதற்கு, பெரியீர் தாங்கள் தாம் என்மீது அன்பும், கருணையும் கொண்டு உதவிகளச் செய்யவேண்ண்டும்."என்று பணிவுடன் கூறினான். அவன் கொண்ட வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனனாகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறை யிலிருந்து மீட்டான். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தான்.

[தொகு] இதையும் பார்க்க‌

[தொகு] வெளியிணைப்புக்கள்

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேசபக்தி&oldid=913137" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்