தேக்கத் தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேக்கத் தொட்டிகள் அல்லது சேமிப்புத் தொட்டிகள் (storage tanks) அல்லது கொள்கலன்கள் என்பவை திரவங்களையும் அழுத்தப்பட்ட வாயுக்களையும் குறுகிய காலத்திற்கோ நீண்ட காலத்திற்கோ, வெப்ப நிலைகளிலும் குளிர் நிலைகளிலும் சேமிக்க பயன்படுத்தப்படும் அமைப்புகள் ஆகும். இந்தப் பெயரை தேக்கிகளுக்கும் (செயற்கை ஏரிகள் மற்றும் குளங்கள்) உற்பத்தி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கும் பயன்படுத்த முடியும்.

அமெரிக்காவில், சேமிப்புத் தொட்டிகளில் அழுத்தம் இல்லாமலோ மிகச் சிறிய அழுத்தத்திலோ திரவங்கள் சேமிக்கப்படுகின்றன. சேமிப்புத் தொட்டிகள் பெரும்பாலும் உருளை வடிவில் தரைக்கு செங்குத்தாக இருக்கும், இவை நிலையான கூரையையோ மிதக்கக்கூடிய கூரையையோக் கொண்டிருக்கும்.

சேமிக்கப்படும் திரவத்தின் தன்மையைப் பொறுத்து சேமிப்புத் தொட்டிகளின் வடிவமைப்பிலும் செயல்பாடுகளிலும் அடிக்கடி பல சுற்றுச்சூழல் விதிமுறைகள் செயல்முறைப் படுத்தப்படும். புவியின் நிலப்பரப்புக்கு மேலுள்ள சேமிப்புத் தொட்டிகளின் விதிமுறைகள் புவியின் நிலப்பரப்புக்கு கீழுள்ள சேமிப்புத் தொட்டிகளின் விதிமுறைகளில் இருந்து வேறுபடுகின்றன.

கோள வடிவ வாயு சேமிப்புத் தொட்டி பண்ணை

சேமிப்புத் தொட்டிகள் பல வடிவங்களில் உள்ளன:

  • செங்குத்து உருளை, கிடைமட்ட உருளை
  • திறந்த வடிவம், மேல் மூடப்பட்ட வடிவம்
  • தட்டையான கீழ் பகுதி, கூம்பு கீழ் பகுதி

பெரிய தொட்டிகள் செங்குத்து உருளை வடிவில் இருக்க வேண்டும் அப்போதுதான் அவை நீர்நிலைசார் அழுத்தத்தைத் தாங்க முடியும். திரவங்களை எடுத்துச்செல்லும் பெரும்பாலான கொள்கலன் டாங்கிகள் பல்வேறு அளவுகளான அழுத்தத்தை கையாள வடிவமைக்கப்பட்டுள்ளன. சேமிப்புத் தொட்டி டாங்கிகள் திரவங்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக அழுத்தமோ வெப்பமோ மாறாமல் கொண்டு செல்ல உதவுகின்றன.

சுத்திகரிப்பு அலைகள்[தொகு]

திரவத்தின் எரி பற்று நிலை புள்ளிகள்(flash-point) அடிப்படையில் சேமிப்பு தொட்டியின் வகைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுவாக எண்ணெய் சுத்திகரிப்பு அலை மற்றும் திரவ எரிபொருட்களை சேமிக்கும் தொட்டிகளில் நிலையான கூரை மற்றும் மிதக்கும் கூரை இரண்டுமே பொறுத்தப்படும்.

  1. நிலையான கூரை சேமிப்புத் தொட்டிகள் மிக அதிக எரி பற்று நிலையைக்(flash-point) கொண்ட திரவங்களுக்கு, (எ.கா. கச்சா எண்ணெய்) பயன்படுத்தப்படுகிறது. கூம்பு கூரைகள், குவிமாடம் கூரை (dome roofs )மற்றும் குடை கூரை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. குவிமாடம் கூரை (dome roofs ) சூழ்நிலையை விட சற்று அதிக அழுத்தம் உடைய திரவங்களை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.
  2. மிதக்கும் கூரை வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள் (பொதுவாக மிதக்கும் கூரை என அழைக்கப்படும்) மற்றும் உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகிறது.

உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள் குறைந்த எரி பற்று நிலை புள்ளிகள் கொண்ட திரவங்களை (எ.கா. பெட்ரோல், எத்தனால்) சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன. உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள் என்பது ஒரு நிலையான கூரை மற்றும் மிதக்கும் கூரை இரண்டுமே பொறுத்தப்படும். இந்த மிதக்கும் கூரை,திரவ மட்டத்திற்கு ஏற்ப உயரவும் மற்றும் தாழவும் செய்யும்.

இந்த மிதக்கும் கூரை குறைந்த எரி பற்று நிலை புள்ளிகள்(flash-point) கொண்ட திரவங்களிலிருந்து வெளியாகும் நீராவிகளை பிடிக்க உதவுகிறது. மிதக்கும் கூரைகள் அதன் கால்கள் மூலம் தொட்டியின் அடிப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகிறது. வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகளில் நிலையான கூரை இல்லை

நாப்தா, மண்ணெண்ணெய், டீசல், கச்சா எண்ணெய் போன்ற நடுத்தர எரி பற்று நிலை புள்ளிகள் கொண்ட திரவங்களை இந்த சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படும்

சிறப்பு அம்சங்கள்[தொகு]

பெரும்பாலான திரவங்கள் சிறிய துளையின் வழியாக கசியவும், ஆவியாகவும், கொட்டவும் முடியும் என்பதால் கையாளுதலில் சிறப்பான கவனம் வேண்டும். எனவே பொதுவாக இந்த கசிவில் இருந்து பாதுகாக்க அணைகரை அல்லது சுவர் கட்டப்படும்.

சில தொட்டிகளில் நிலையான கூரையுடன் கூடுதலாக மிதக்கும் கூரையும் தேவைப்படுகிறது. இந்த மிதக்கும் கூரை திரவ மட்டத்திற்கு ஏற்ப உயரவும் மற்றும் தாழவும் செய்யும். இதனால் நீராவி, திரவத்தின்மேல் இருப்பதை குறைக்க முடியும். மிதக்கும் கூரைகள் பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பாதுகாப்பு தேவை, மற்றும் மாசு தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.

உலோக சேமிப்புத் தொட்டிகள், மண் மற்றும் கச்சா எண்ணெயுடன் தொடர்பு கொள்வாதல் அரிப்பு மற்றும் துருப்பிடிக்காமல் இருக்க எதிர் மின் முனைமக் காப்பு (Cathodic protection) பயன்படுத்தப்படுகிறது.

தொட்டியின் பிற வகைகள்[தொகு]

வளிமண்டல சேமிப்புத் தொட்டிகள்[தொகு]

வளிமண்டல சேமிப்புத் தொட்டிகள் என்பது திரவத்தை வளிமண்டல அழுத்ததில் சேமிக்க உதவும் கொள்கலன்கள் ஆகும். இதன் முக்கிய வடிவமைப்பு குறியீடு ஏபிஐ 650 மற்றும் ஏபிஐ 620 இருக்கிறது.

உயர் அழுத்த சேமிப்புத் தொட்டிகள்[தொகு]

ஹைட்ரஜன் மற்றும் குளோரின் போன்ற திரவமாக்கப்பட்ட வாயுக்கள் , அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுக்கள் , மற்ற அழுத்தப்பட்ட வாயுக்களை சேமிக்கும் போது அதிக அழுத்தங்களை தாங்க வேண்டும். எனவே அதற்கு எற்ப தொட்டிகள் வடிவமைக்கப்படும். இவை வாயு உருளைகள் எனவும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்கத்_தொட்டி&oldid=2009988" இலிருந்து மீள்விக்கப்பட்டது