தெலுங்கு நாயுடு
தெலுங்கு பேசும் கவரா நாயுடு,பலிஜா, போயர், கம்மவர் , ராஜகம்பளம் மற்றும் தொட்டிய நாயக்கர் ,கொல்லா சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.
வரலாறு [தொகு]
ஆந்திராவில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் விஜயநகரப் பேரரசு திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்களால் குடியேறிய தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள் குழுவினர்.
1909 - இல் , எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் துகை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து என்னவெனில், "நாயுடு" அடைமொழி பயன்படித்திய சாதிகள் எவை எவை என பின்வருமாறு கூறியுள்ளார். அவை முறையே, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா, மற்றும் வேலம. என்பனவாகும், மேலும் Thurston அவர்கள் "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் எனவும் அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.[1]
சமூகபிரமுகர்கள் [தொகு]
- கி. ராஜநாராயணன் - எழுத்தாளர் - சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- ஆற்காடு வீராசாமி தமிழக மின் துறை அமைச்சர்
- வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் -கம்மவார் நாயுடு
- விஜயகாந்த் திரைப்பட நடிகர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் - கவரா நாயுடு
- எம். ஆர். ராதா திரைப்பட நடிகர்
- ராதிகா திரைப்பட ,தொலைக்காட்சி நடிகை
- ஜெயம் ரவி தமிழ்த் திரைப்பட நடிகர்