துறவி நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துறவி நண்டுகள் (Hermit Crabs)
புதைப்படிவ காலம்: 136–0 Ma
Pagurus armatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குலகம்
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: மெல்லுடலிகள்
வகுப்பு Malacostraca
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: Anomura
பெருங்குடும்பம்: Paguroidea
Latreille, 1802
Families

துறவி நண்டுகள் (Hermit crabs) என்பவை பத்துக்கால் மெல்லுடலிப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த நண்டுகள் ஆகும். இந்த நண்டுகள் நத்தைகள் விட்டுச் சென்ற சங்குக் கூடுகளைத் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

கூட்டினைச் சுமந்து கொண்டு இவை தனியாக வாழ்வதால் துறவி நண்டு எனும் பெயர் பெற்றதாய்க் கருதப்படுகிறது.

இந் நண்டுகள் வளர வளர தங்கள் கூட்டினையும் மாற்றிக் கொள்ளும். சில வேளைகளில் பல நண்டுகள் ஒன்றாகக் குழுமியிருந்து ஒரு நண்டு கழற்றிய கூட்டை மற்றொரு சிறிய நண்டு எனும் முறையில் வரிசையாக மாற்றிக் கொள்ளும். இந்தக் கூட்டினைப் பெற இவற்றிடையே பெரும் சண்டை நடப்பதும் உண்டு.

[தொகு] ஒன்றிய வாழ்வு

சில வேளைகளில் இத்துறவி நண்டுகள் கடற் சாமந்திகளுடன் ஒன்றிய வாழ்வை ஏற்படுத்திக் கொள்கின்றன. கடற் சாமந்திகள் துறவி நண்டின் எதிரிகளைப் பயமுறுத்துகின்றன. கடற்சாமந்திகளோ துறவி நண்டு உண்ணும் போது உணவுத் துண்டுகளைப் பெற்றுக் கொள்கின்றன.

[தொகு] வளர்ப்பு விலங்குகளாக

துறவி நண்டுகள் வளர்ப்பு விலங்குகளாயும் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக விற்பனையாளர்கள் இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வாங்கும்படி அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவை குழுக்களாக நல்ல முறையில் நடந்து கொள்கின்றன. சில சிற்றினங்கள் நன்கு கவனித்தால் 32 வருடங்கள் வரை கூட வாழக்கூடியவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துறவி_நண்டு&oldid=972783" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்