துருகானினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருகர்நானர் (துருகானினி)
1866 இல் துருகானினி
பிறப்புகி. 1812
புரூணி தீவு, ஆஸ்திரேலியா
இறப்புமே 8 1876
ஹோபார்ட், ஆஸ்திரேலியா
மற்ற பெயர்கள்துருகானினி, துருக்கானினி, லல்லா ரூக்
அறியப்படுவதுதாஸ்மேனியப் பழங்குடியினத்தின் கடைசிப் பெண்

துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு 'கறுப்பனை பிடித்தல்' (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.

ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்[தொகு]

தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார்.

ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு பின்[தொகு]

இறுதி நாட்களில் இறுதி இனக்குடிகளுடன் துருகானினி (இடது ஓரம்)

இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. 'கறுப்பனை பிடித்தல்' (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார்.

இறப்பிற்குப் பின்[தொகு]

துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் 'தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்' என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர்.

இறுதியடக்கம்[தொகு]

இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • மனிதனுக்குள் ஒரு மிருகம் - மதன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருகானினி&oldid=3216893" இலிருந்து மீள்விக்கப்பட்டது