துயிலெடை நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துயிலெடை நிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1]. தொல்காப்பியக் காலத்தில் மன்னனைக் குறித்துப் பாடப்படும் இது ஒரு துறையாக இருந்தது. பின்னர் பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாகவும் உருவானது. இக்காலத்தில் இச் சிற்றிலக்கியம் பள்ளியெழுச்சி என்றும் அழைக்கப்படுவது உண்டு.

குறிப்புகள்[தொகு]

  1. பன்னிரு பாட்டியல், பாடல் 324

உசாத்துணைகள்[தொகு]

  • சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துயிலெடை_நிலை&oldid=1562417" இலிருந்து மீள்விக்கப்பட்டது