துப்பாக்கி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துப்பாக்கி
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புகலைப்புலி தாணு
கதைஜெகன் சக்தி
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
வெளியீடு13 நவம்பர் 2012
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்125கோடி

துப்பாக்கி (Thuppakki) என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார்.[1][2] இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.[3][4]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் டிசம்பர் 5,2011 அன்று தொடங்கி[5] 35 நாட்கள் நடைபெற்று முடிந்தது.[6] இப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி 60 சண்டைப்பயிற்சி வீரர்களுடன் 7 காமிராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.[7]

பிணக்குகள்[தொகு]

தலைப்பு பற்றிய பிணக்கு[தொகு]

தங்களின் கள்ள துப்பாக்கி என்ற படத்தின் தலைப்பு போல் இருப்பதால் துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த தடைவிதிக்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார்.[4][8]

இசுலாமியர்கள் குறித்த பிணக்குகள்[தொகு]

இத்திரைப்படம் இசுலாமியர்களை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி சில இசுலாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.[9][10][11] அதனைத் தொடர்ந்து விஜய் அரசிடம் திரைப்படத்தைப் பாதுகாக்கக் கூறி மனு தாக்கல் செய்தார்.[12] அதன்பின்னர் சர்ச்சைக்குறிய காட்சிகளுக்காக மன்னிப்புக் கோரிய பிறகு அக்காட்சிகள், படத்தில் இருந்து நீக்கப்பட்டன.[13] இத்தவறுக்கு பரிகாரமாக விஜய் ஒரு படத்தில் இசுலாமியராக நடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் அறிவித்துள்ளார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vijay to woo Kajal in next!". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-29.
  2. "Kajal bags the lead in Vijay’s next - Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2011-11-18 இம் மூலத்தில் இருந்து 2013-09-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130902041604/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-18/hubli/30414394_1_kajal-aggarwal-priyanka-chopra-ar-murugadoss. பார்த்த நாள்: 2011-12-29. 
  3. "'Thuppakki',Vijay’s next". Deccan Chronicle. 2 December 2011 இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106084103/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/thuppakkivijay%E2%80%99s-next-903. பார்த்த நாள்: 2 December 2011. 
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-07. பார்க்கப்பட்ட நாள் 2012-09-05.
  5. Vijay’s Thupakki starts!
  6. Subramanian, Anupama (January 17, 2012). "My wife Sangeetha motivated me, says Vijay". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120118103420/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/my-wife-sangeetha-motivated-me-says-vijay-486. பார்த்த நாள்: 19 January 2012. 
  7. "Climax of Thuppakki Shot With 60 Fighters and 7 Cameras". Top 10Cinema. Archived from the original on 30 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. துப்பாக்கியை சீண்டும் கள்ள துப்பாக்கி[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!". Archived from the original on 2012-11-16. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.
  10. "துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?". Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.
  11. "இசுலாமியர்கள் எதிர்ப்பு எதிரொலி... இன்று நடக்கவிருந்த துப்பாக்கி ஊடக சந்திப்பு ரத்து!". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "துப்பாக்கி படத்திற்கு கடும் எதிர்ப்பு... பாதுகாப்பு கோரி அரசிடம் விஜய், கலைப்புலி தாணு மனு!". Archived from the original on 2012-11-17. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.
  13. "துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "'துப்பாக்கி தவறுக்கு பிராயச்சித்தம்... ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் விஜய்' - எஸ்ஏசி!!". Archived from the original on 2012-12-01. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பன்னாட்டு திரைப்பட தரவுத் தளத்தில் துப்பாக்கி (ஆங்கிலத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்பாக்கி_(திரைப்படம்)&oldid=3709119" இலிருந்து மீள்விக்கப்பட்டது