துணி துவைக்கும் இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீரையும் அழுக்கு அகற்றும் கலவையையும் பயன்படுத்தி துணிகளைத் தோய்த்து தரும் இயந்திரம் துணி துவைக்கும் இயந்திரம் ஆகும். இது மின்னாற்றலில் இயங்கும் ஒரு வீட்டுக் கருவி ஆகும்.
அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்தமாக்குவது ஒரு சுகாதாரத் தேவை. இது ஒரு அழகியல் செயற்பாடும் கூட. முன்னைய காலகட்டங்களில் உடையை நீரில் நனைத்து, கைகளால் தேய்த்து, சவர்க்காரம் போட்டு அழுக்கு நீக்கி அலசித் தோய்த்தனர். இது நேரமெடுக்கும், உடலுழைப்பு தேவையான ஒரு செயற்பாடு. நேரத்தைக் குறைந்து, உடலுழைப்பைத் தவிர்க்க துணி துவைக்கும் இயந்திரம் உதவுகிறது.

