தீண்டாமை ஒழிப்பு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு‍ தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோற்றுவிக்கப்பட்ட நாள் 2007
இணையதளம் tneuf.org [1]

தீண்டாமை[தொகு]

இந்திய சமூகத்தின் ஆதிக்க மனநிலை, சகமனிதனை மனிதனாக நடத்தாமல், மிருகங்கள் போலும் தங்கள் நிலம் மற்றும் வீடுகளில் அடிமட்ட மற்றும் அடிமை வேலைகளைச் செய்பவர்களாக மட்டுமே கருதும் அவல நிலையே தீண்டாமை.

தோற்றம்[தொகு]

தீண்டாமை வருணாசிரமத்தின் அடிப்படையில் மனிதர்களை ஒவ்வொரு‍ குறிப்பிட்ட வேலைக்கும் அமர்த்துவதற்காக மனிதர்களை பிரித்து‍ அதனடிப்படையில் அவர்களை தொழில் செய்ய பணி்க்கப்பட்டதும் ஆகும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி[தொகு]

தமிழ்நாடு‍ தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணி 2007 ஆம் ஆண்டு‍ உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒவ்வொரு‍ தொழிலையும் செய்ய குறிப்பிட்ட மக்களை வேலை செய்ய இந்து‍ மதத்தின் அடிப்படையான வருணாசிரமத்தின் கோட்பாட்டின் படி‍ ஒதுக்கியது. இதன் காரணமாக சமூகத்தில் இன்றளவும் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் சமூகத்தின் கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய பணிக்கப்படுகின்றனர். அவர்களில் குறிப்பாக பட்டியல் இன சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஆவார்.[1]

வரலாறு‍[தொகு]

2007 ஆம் ஆண்டு‍ ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம். சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு‍ எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து‍ போராடிக் கொண்டிருக்கும் ஒரு‍ இயக்கமாகும்.

இயக்கங்கள்[தொகு]

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு[தொகு]

உத்தப்புரம்[தொகு]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.[2]

ஈச்சங்கோட்டை[தொகு]

ஈச்சங்கோட்டை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சவரம் செய்யும் கடைகளில் முடி‍ திருத்தம் செய்ய அனுமதிக்கப்படாததை எதிர்த்த இயக்கம் செப்டம்பர் 30 அன்று‍ நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக அம்மக்கள் முடிதிருத்த அக்கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [3]

ஆலய நுழைவுப் போராட்டங்கள்[தொகு]

மூலம்[தொகு]