தீண்டாமை
தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், ஆதிவாசிகள், குற்றவாளிகள், ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள், கழிவகற்றும் தொழி செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது.
தீண்டாமை பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தலித் மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த்ய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.[1]
யேமனில் நிலவிவரும் அல்- அக்டாம் இனத்தவருக்கு எதிரான பாகுபாடும், யப்பானில் புரகுமின் மக்களுக்கு எதிரான பாகுபாடும், ஐரோப்பாவில் நாடோடிகளுக்கெதிரான பாகுபாடும் தீண்டாமைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ India's "Untouchables" Face Violence, Discrimination. Hillary Mayell for National Geographic News. June 2, 2003