தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் |
| தகவல் |
| அமைவிடம் |
துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
| நிலை |
Complete |
| கட்டப்பட்டது |
செப்டெம்பர் 2008 |
| திறப்பு |
அக்டோபர் 1, 2008 |
| பயன்பாடு |
விடுதி, வதிவிடம்[1] |
| உயரம் |
| கூரை |
306 metres (1 ft)[1] |
| தள எண்ணிக்கை |
63[1] |
முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் (அரபு மொழி: فندق البحيرة و شقق برج دبي المخدمة), ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது துபாய் மால் என்னும் வணிகத் தொகுதி, பழைய நகர், பூர்ஜ் துபாய் ஏரி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது.[2] 303 மீட்டர் உயரத்துடன் கூடிய இக் கட்டிடத்தில் 63 தளங்கள் உள்ளன.[2] இக் கோபுரம், பூர்ஜ் துபாய் என்னும் உலகின் உயரமான கட்டிடத்தை உள்ளடக்கிய, பூர்ஜ் துபாய் வணிகப்பகுதி பெருந் திட்டத்தின் ஒரு பகுதியாகும். [2] 2008 ஏப்ரலில் முழு உயரத்தை அடைந்த இக் கட்டிடம் துபாயின் ஆறாவது உயரமான கட்டிடமும், உலக அளவில் 36 ஆவது உயரமான கட்டிடமும் ஆகும். இது செப்டெம்பர் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.
[தொகு] குறிப்புகள்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புகள்
[தொகு] கட்டுமானப் படங்கள்
அமைவிடம்: 25°11′38.23″N 55°16′44.75″E / 25.1939528, 55.2790972