தி. பரமேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. பரமேசுவரி சென்னையில் 1970ல் பிறந்த எழுத்தாளர், தமிழாசிரியர். பூங்குழலி, திலீபா எனும் புனைப் பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

வெளியிட்டுள்ள நூல்கள்[தொகு]

  • ம.பொ.சி. பார்வையில் பாரதி - ஆய்வு நூல் [2003]
  • எனக்கான வெளிச்சம் - கவிதைத் தொகுப்பு [2005]
  • ஓசை புதையும் வெளி - கவிதைத் தொகுப்பு [2010]

பதிப்பித்த நூல்கள்[தொகு]

  • ம.பொ.சி.யின் சிறுகதைகள் [2006]
  • ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை [2008]
  • ம.பொ.சி.யின் தமிழன் குரல் - இதழ்த் தொகுப்பு [2010]

பரிசுகள்[தொகு]

இவருடைய “எனக்கான வெளிச்சம்” கவிதைத் தொகுப்பிற்காக “திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு” பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._பரமேசுவரி&oldid=2720132" இலிருந்து மீள்விக்கப்பட்டது