திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டினத்தார் கோயில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவரான பட்டினத்தார் லிங்க வடிவில் உள்ளார். சித்தரான பட்டினத்தார் முக்தி பெற்ற இத்தலத்தில் சிவனாகவே வணங்கப்பெறுகிறார்.

தல வரலாறு[தொகு]

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்

பட்டினத்தாரும், அவருடைய சீடரான பத்ரகிரியாரும் திருவிடைமருதூரில் தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்