திருவாசிரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாசிரியம் நம்மாழ்வாரின் நூல்களில் ஒன்று.

இதில் ஏழு ஆசிரியப்பாக்கள் உள்ளன.
இவை அந்தாதித்தொடையில் அமைந்துள்ளன.
இந்த நூலை யஜுர்-வேத சாரம் என்பர்.
இதன் முகப்பில் அருளாளப் பெருமான் எம்பெருமானார் இயற்றிய கலிவிருத்தத்தாலான தனியன் பாடல் ஒன்று உண்டு.

பாடல் தரும் செய்தி[தொகு]

1
திருமால் மூவுலகு அளந்த சேவடியான். தாமரை உந்தி நாயகன். அவனுக்கு உடை செவ்வானம். சுடர், மதி, மீன்கள் சூடியிருக்கும் பவளவாய் மரகதக் குன்றம். கடலோன் மேல் பள்ளிகொண்டுள்ளான். வாயும் கண்ணும் சிவப்பு. மேனி பச்சை. ஐந்தலை நாகப் படுக்கையில் அறிதுயில் கொள்கிறான். சிவன் அயன் இந்திரன் முனிவர் முதலானோர் தொழுது நிற்கின்றனர்.
2
  • ‘நேரிய காதல் அன்பில் அன்பு ஈன்ற தேறல்’
  • ‘அமுத வெள்ளத்தான்’
3
  • தெய்வம் மூன்றில் முதல்வன்
இதில் வரும் முடுகிசை
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர
உருமுரல் ஒலிமணி நளிகடல் படவர [1]
4
பெரும்பாழ் காலத்து சிவன், அயன் ஆகியோரையும், மூவுலகையும் படைத்த முதல்.
5
  • தாமரைக் கண்ணான்
  • கனி வாயன்
  • கற்பகம் முதலான ஆயிரம் தழைத்த முடி புனைந்தவன்
6
படைத்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து, அளந்து, நேர்ந்து, உலகளிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப, புடைப் பல தான் அறி தெய்வம் பேணுதல் தனாது புல்லறிவாண்மை.
7
ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் ஒருமா தெய்வம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மலை போன்ற அலை. பெருமலை நடுங்கும் இடி போன்ற அலையோசை, நடுவில் பள்ளிகொண்டுள்ளான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாசிரியம்&oldid=1429636" இலிருந்து மீள்விக்கப்பட்டது