திருமாவளவன் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமாவளவன் (கனடா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருமாவளவன் (பி. 1955) ஒரு தமிழ் கவிஞர். இவரது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த கலைச்செல்வனின் சகோதரர். இப்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார்.

பொருளடக்கம்

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)
  • பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.
  • அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.
  • இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.

[தொகு] இதழியல் பங்களிப்பு

கனடாவில் இருந்து வெளிவந்த 'ழ'கரம் (1996-1997)சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.

[தொகு] விருது

கனடாவில் இயங்கும் தமிழ்த்தோட்டம், திருமாவளவனின் 'இருள்யாழி' கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.

[தொகு] வெளியிணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருமாவளவன்_(கவிஞர்)&oldid=847519" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி