திருச்சி வானூர்தி நிலையம்
| Tiruchirapalli Airport திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் ISO 9001:2008 CERTIFIED |
|||
|---|---|---|---|
| IATA: TRZ – ICAO: VOTR
|
|||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்திநிலைய வகை | பொதுத்துறை | ||
| உரிமையாளர் | Ministry of Civil Aviation | ||
| இயக்குனர் | இந்திய வானூர்திநிலையங்கள் ஆணையம் | ||
| சேவை புரிவது | திருச்சிராப்பள்ளி | ||
| அமைவிடம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா | ||
| உயரம் AMSL | 288 அடி / 88 மீ | ||
| ஆள்கூறுகள் | |||
| இணையத்தளம் | |||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| மீ | அடி | ||
| 09/27 | 2,480 | 8,136 | Asphalt |
| புள்ளிவிவரங்கள் (2010 April To 2011 March) | |||
| பன்னாட்டு பயணிகள் | 669,237[1] | ||
| வெளிநாட்டு போக்குவரத்து | 5,864[2] | ||
| உள்நாட்டு பயணிகள் | 86,356[1] | ||
| உள்நாட்டு போக்குவரத்து | 1,318[2] | ||
| Source: World Aero Data[3] | |||
திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவையை இயக்க தொடங்கின. தற்போது கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து திருச்சி விமான நிலையம் தான் சர்வதேச விமான போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக 20 ஆண்டுக்கு மேலாக விளங்கியது. சராசரரியாக ஆண்டுக்கு இங்கு 1550 உள்நாட்டு போக்குவரத்தும், 4690 வெளிநாட்டு போக்குவரத்தும் நடந்து வருகிறது. இந்த விமான நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டு போக்குவரத்து விமானங்களை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது. ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற இந்த விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல உதவியாக மிகச் சிறந்த சேவையாற்றி வருகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இந்த விமான நிலையம் இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் விமானப்படை உலக போரின் போது இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி்யது. போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டது. உலக போருக்கு பின்னர் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 80களின் ஆரம்பகாலத்தில் தொடங்கப்பட்டது. இலங்கை ஏர்லைன்ஸ் வாரம் ஒரு முறை கொழும்புக்கு 1981 ம் ஆண்டு விமான சேவையை துவக்கியது, பின்னர் படிபடியாக இப்போது தினசரி இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் 80களில் சென்னைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கம் தனது செயல்பாடுகளை தொடங்கியது.
பிஆர் பிரவுஸ்(1942 இல் திருச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்ததார்) ன்படி 1930 மற்றும் 40களில் விமான நிலையம் ரேஸ் கோர்ஸாக பயன்படுத்தப்பட்டது. விமான நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு கோபுரமும் 600 மீட்டர் ஓடுபாதை தவிர எந்த கட்டிடம் இல்லை. மேலும் அவர் கூறுகையில், திருச்சி விமான நிலையம் டாட்டாவின் டகோட்டா ரக விமானங்களை கையான்டுள்ளது. இந்த விமானம் மும்பையிலிருந்நு பெங்களூரு வழியாக திருச்சி வந்து எரிபொருள் நிரப்பிய பிறகு பயணிகளை ஏற்றிக்கொன்டு கொழும்புக்கு சென்றது.[4]. வழக்கமாக 5 முதல் 20 பேர் திருச்சியிலிருந்து இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
[தொகு] முனையங்கள்
திருச்சி விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.
[தொகு] பயணிகள் முனையம்
80 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கி ஜூன் 2009 1ல் இருந்து செயல்பாட தொடங்கியது[5] இரண்டு மாடி முனையத்தில் மொத்த தரை பகுதி 11,777 சதுர மீட்டர் உள்ளது . முனையம் கொடுக்கப்பட்ட நேரத்தில் 400 பயணிகளை கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையத்தின் சில அம்சங்கள் : [6]
- 12 சோதனை கவுண்டர்கள்
- 4 சுங்கத்துறை கவுண்டர்கள் (1 புறப்பாடு + 3 வருகை)
- 16 புலம்பெயர்வு கவுண்டர்கள் (8 புறப்பாடு + 8 வருகை)
- 3 சாதன வார்கள் (47 மீ ஒவ்வொன்றும்)
- 1 பேக்கேஜ்க்கான எக்ஸ்ரே ஸ்கேனர்
- பாதுகாப்பு சோதனை அலகுகள் = 2
- மொத்தம் விமானம் நிற்க இடம் = 7
- 3 குறியீடு டி விமானத்திற்கு
- 4 குறியீடு சி விமானத்திற்கு
[தொகு] சரக்கு முனையம்
விமான நிலையத்தில் பழைய முனையம் ஒரு சர்வதேச சரக்கு வளாகம் மாற்றப்பட்டுள்ளது. 4000 சதுர மீட்டர் சரக்கு வளாகம் 21 நவம்பர் 2011 அன்று செயல்பாட்டிற்கு வந்தது.[7]. தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் லிருந்து வெளிநாட்டு ஏற்றுமதி செய்ய சுலபமான வழியாகவும் நுழைவாயிலாகவும் இந்த விமான நிலையம் உள்ளது. அழிய கூடிய மற்றும் கெடாத பொருட்கள், ஆடைகள், கைத்தறி, கணினி ஹார்டுவேர் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது, இதனால் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை உள்ளது. 6000 முதல் 7000 டன்கள் வரை சரக்குகள் ஏற்றுமதி செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது.[8]
[தொகு] ஏர்லைன்ஸ் மற்றும் இலக்குகள்
| ஏர்லைன்ஸ் | இலக்குகள் |
|---|---|
| எயர் ஏசியா | கோலாலம்பூர் |
| ஏயர் இந்தியா எக்ஸ்பிரஸ் | அபுதாபி, சென்னை, துபாய், சிங்கப்பூர் |
| ஜெட் ஏர்வேஸ் | சென்னை |
| மிகின்லங்கா | கொழும்பு |
| ஸ்பைஸ் ஜெட் | பெங்களூரு, சென்னை |
| சிறீலங்கன் எயர்லைன்ஸ் | கொழும்பு |
| டைகர் ஏர்வேஸ் | சிங்கப்பூர் |
[தொகு] புகைப்படங்கள்
[தொகு] ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 http://airportsindia.org.in/traffic_news/mar2k11annex3.pdf
- ↑ 2.0 2.1 http://airportsindia.org.in/traffic_news/mar2k11annex2.pdf
- ↑ Airport information for VOTR at World Aero Data. Data current as of October 2006.
- ↑ http://www.flightglobal.com/pdfarchive/view/1935/1935%20-2-%200406.html
- ↑ "Trichy Airport new terminal inauguration". The Hindu. 18 February 2009. http://www.hindu.com/2009/02/18/stories/2009021857220100.htm. Retrieved 13 January 2011.
- ↑ "Trichy Airport new terminal". Equity Bulls. 22 February 2009. http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=46165. Retrieved 5 January 2011.
- ↑ Cargo complex commissioned
- ↑ [1]