திருகோணமலை கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருகோணமலை கோட்டை திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைதுள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. சமாதான ஒப்பந்தம் கைச்சாதான பின்பு இதனுள்ளே செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. ஆயினும் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில் மீளவும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும். கோட்டை நுழைவாயிலில் உள்ள வரலாற்று பதிவு தகட்டைப் பார்த்தால் இந்தக் கோட்டையின் மீதான காலனி சக்திகளின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளலாம்.

[தொகு] வரலாறு

1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.

ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பல காலனி ஆதிக்க சக்திகள் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே.

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருகோணமலை_கோட்டை&oldid=933667" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்