தியோடலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தியோடலைட்டு

தியோடலைட்டு என்னும் கருவி கோணங்களைத் துல்லியமாகப் அளக்கப் பயன்படும் நில அளவையியல் கருவி. இக்கருவியின் அடிப்படை, ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு தளங்களில் (மேலும் கீழுமாகவும் ,இட-வலமாகவும்) நகர வல்ல ஒரு தொலை நோக்கி பொருத்தப்பட்டக் கருவி. இது முக்கோண முறையில் நிலத்தின் அமைப்புகளை அளவிட மிகவும் பயனுடைய கருவி. இக்கருவியை முதன் முதலாக தாமசு டிக்சு (Thomas Digges) என்பவர் 1571 ஆம் ஆண்டு எழுதிய பான்ட்டோ மெட்ரியா ((Pantometria) என்னும் நில அளவையியல் நூலில் விளக்கினார். இவருடைய தந்தையாகிய லியோனார்டு டிக்சு அவர்கள் தான் இக்கருவியக் கண்டு பிடித்ததாகக் கூறுவர். இந்த தியோடலைட்டு, பழைய அரேபிய முறையாகிய அல்-ஃஇடேடு முறையைப் பின்பற்றியது. அரேபிய மொழியில் அல்-இடாட என்றால் அளவுக்கோல் என்று பொருள்.

செங்குத்தான இரு தளங்களில் நகர் முறை
தற்கால மின் தியோடலைட்டு

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்