தியான் சந்த்
| தியான் சந்த் | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | தியான் சந்த் சிங் 29 ஆகத்து, 1905 அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | திசம்பர் 03 1979 (அகவை 74) தில்லி |
| நினைவிடம் | ஜான்சி ஹீரோஸ் மைதானம், அலகாபாத் |
| தேசியம் | இந்தியர் |
| அறியப்படுவது | வளைதடிப் பந்தாட்டம் |
| உயரம் | 5'3" |
| பெற்றோர் | சாமேசுவர் தத் சிங் |
| வென்ற பதக்கங்கள் | |||
|---|---|---|---|
| ஆடவர் ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம் | |||
| தங்கம் | 1928 ஆம்ஸ்டர்டம் | அணி விளையாட்டு | |
| தங்கம் | 1932 லாஸ் ஏஞ்சலஸ் | அணி விளையாட்டு | |
| தங்கம் | 1936 பெர்லின் | அணி விளையாட்டு | |
தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும்[1] ஓர் இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.
பொருளடக்கம் |
சிறப்பு நிகழ்வுகள் [தொகு]
- ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.[2]
- 1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக என சுவரொட்டிகள் எழுந்தன. [2]
- 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).[2][3]
- ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர். [4]
வாழ்க்கை வரலாறு [தொகு]
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[5]
பாரத் ரத்னா [தொகு]
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா இதுவரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது [6]. இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது. [7]
மேலும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Dhyan Chand (Indian athlete)". Encyclopædia Britannica.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Dhyan Chand ( a bio-graphical sketch)". Mudraa.com (2010-03-21). பார்த்த நாள் 2012-01-19.
- ↑ "The Indian who captivated even Hitler". rediff.com. பார்த்த நாள் 2012-01-19.
- ↑ "Why Dhyan Chand doesn't need a Bharat Ratna". IBN Live (இந்தியா). 29 ஆகத்து 2011. http://ibnlive.in.com/news/why-dhyan-chand-doesnt-need-a-bharat-ratna/179606-5-136.html.
- ↑ "DHYAN CHAND — Player, legend and the man". The Tribune (Chandigarh, India). 29 August 2009. http://www.tribuneindia.com/2009/20090829/sports.htm#5.
- ↑ Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012
- ↑ Madhya Pradesh to set up museum after Dhyan Chand டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் தியான் சந்த் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Dhyan Chand at PeopleForever.org
- The Indian who captivated even Hitler, Qaiser Mohammad Ali, Rediff.com
- Feature: Hockey's Genius - Dhyan Chand, Rohit Brijnath, PlanetFieldHockey.com
- Gulu Ezekiel and K. Arumugam, Great Indian Olympians
- K. Arumugam, Dhyan Chand Centenary, Hockey Yearbook 2006.
- A tribute to Dhyan Chand, Rediff.com
