தினபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினபதி ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு நாளிதழ். சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்)வெளியிடப்பட்டது. 1966 முதல் எஸ். ரி. சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய அழகியல் உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிந்தாமணி வெளியிடப்பட்டது. இராஜ அரியரத்தினம் இதன் ஆசிரியராக இருந்தார். இப்பத்திரிகைகள் 1974 ஆம் ஆண்டில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசினால் தடை செய்யப்பட்டன.