தா. திருநாவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. திருநாவுக்கரசு
T. Thirunavukarasu
இலங்கை நாடாளுமன்றம்
for வட்டுக்கோட்டை
பதவியில்
1977–1982
முன்னையவர்ஆ. தியாகராஜா
பின்னவர்நீலன் திருச்செல்வம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-09-01)1 செப்டம்பர் 1933
இறப்பு1 ஆகத்து 1982(1982-08-01) (அகவை 48)
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
இனம்இலங்கைத் தமிழர்

தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு (Thamodarampillai Thirunavukarasu, 1 செப்டம்பர் 1933 – 1 ஆகத்து 1982) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருநாவுக்கரசு இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் 1933 செப்டம்பர் 1 இல் பிறந்தார்.[1][2]

அரசியலில்[தொகு]

ரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் முதற்தடவையாகப் போட்டியிட்டார். இவர் 3,000 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவதாக வந்து தோற்றார்.[3] தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அரசியல் கூட்டணியில் 1972 ஆம் ஆண்டில் இணைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளராக திருநாவுக்கரசு பணியாற்றினார்.[2]

1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு ஆ. தியாகராஜாவை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசு வென்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

திருநாவுக்கரசு 1982 ஆகத்தி 1 இல் மாரடைப்பால் காலமானார்.[2][5] இவரது இடத்திற்கு நீலன் திருச்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thirunavukarasu, Thamodarampillai". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 231. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  3. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
  4. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
  5. Rajasingham, K. T.. "Chapter 28: Prelude to eruption". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2007-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071023105228/http://www.atimes.com/ind-pak/DB23Df04.html. பார்த்த நாள்: 2013-08-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._திருநாவுக்கரசு&oldid=3557564" இலிருந்து மீள்விக்கப்பட்டது