தால்மேசிய கூழைக்கடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தால்மேசிய கூழைக்கடா
ComputerHotline - Pelecanus crispus (by) (1).jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: கூழைக்கடா
குடும்பம்: கூழைக்கடா
பேரினம்: கூழைக்கடா
இனம்: P. crispus
இருசொற்பெயர்
Pelecanus crispus
Bruch, 1832

தால்மேசியக் கூழைக்கடா என்பது கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இது தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இந்தியா, சீனா வரையுள்ள ஆழம் குறைந்த ஏரிகளிலும் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. தாவரங்களின் குவியிலில் இவை கூடு கட்டுகின்றன.

Pelecanus crispus-20030720.jpg

கூழைக்கடாக்களில் இவையே மிகவும் பெரியன. சராசரியாக 160–180 செ.மீ (63-70 அங்குலம்) நீளமும், 11–15 கிலோகிராம் (24-33 பவுண்டு) எடையும் இருக்கும். இவற்றை இறக்கைகள் விரித்த நிலையில் 3  மீட்டருக்கும் (10 அடி) அதிகமாக இருக்கும்.[1] 11.5 கிலோ எடையுள்ள இப்பறவைகளே உலகின் மிகப்பெரிய பறக்கும் திறனுள்ள பறவைகளாகும்.[2][3] இனப்பெருக்க காலத்தில் இவற்றின் கீழ் அலகு சிவப்பு நிறத்தில் காணப்படும். இளம் பறவைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

இப்பறவை சிறுதொலைவுக்கு வலசை போகிறது. மீன்களே இவற்றின் முதன்மையான உணவு. மீனைத் தவிர சிறு நீர்வாழ் உயிரிகளையும் உணவாகக் கொள்ளும்.

Pelecanus crispus at Beijing Zoo.JPG

வாழிட அழிப்பினால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.[clarification needed]. 1994-ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ஐரோப்பாவில் ஏறத்தாழ 1000 இணைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைன், உருசியா, கிரேக்கம், மசிடோனியக் குடியரசு, உரோமானியா, பல்கேரியா, அல்பேனியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன.


References[தொகு]

  1. Birdlife International
  2. del Hoyo, et al., Handbook of the Birds of the World. Volume 1: Ostrich to Ducks. Lynx Edicons (1992), ISBN 978-84-87334-10-8
  3. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), ISBN 978-0-8493-4258-5.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தால்மேசிய_கூழைக்கடா&oldid=1552791" இருந்து மீள்விக்கப்பட்டது